பாகிஸ்தானில் அல்கொய்தா தீவிரவாதிகள் கைது !

crime-arrest

லாகூரில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இல்லத்தில் இருந்து சில கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ராய்விந்த் என்ற இடத்தில் ஒரு வீட்டில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் நிதிக்குழு உறுப்பினர்கள் 3 பேர் தங்கி இருப்பதாக தீவிரவாத தடுப்பு போலீஸ் படையினருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில், உளவுத்துறையினரின் ஒத்துழைப்புடன் அங்கு அவர்கள் விரைந்து சென்று அந்த வீட்டை சுற்றி வளைத்து அவர்களை கைது செய்தனர். அவர்கள், தாரிக் அஜிஸ், அப்துல் கபார், மெஹர் ஹமித் அலி ஆவார்கள்.

அவர்களிடம் இருந்து ரொக்கப்பணம், ஆயுதங்கள், வெறுப்புணர்வை பரப்பும் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள், அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துக்கு நன்கொடை திரட்டித்தந்ததுடன், பஞ்சாப் மாகாணத்தில் தீவிரவாத செயல்களை அரங்கேற்றுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தந்தும் வந்துள்ளனர்.

அவர்கள் மீது தீவிரவாத தடுப்பு சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.