அபு அலா
அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியாலையின் 26வது தொற்றாநோய் சிகிச்சை நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை (06) வைத்தியசாலை தொற்றாநோய் பிரிவில் இடம்பெற்றது.
வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் கலந்து கொண்டார்.
அவர் உரையாற்றுகையில்,
எந்தவொரு நிருவாகமாக இருந்தாலும் அந்த நிருவாகத்தின் தலைவர் சிறந்த செயலாற்றல் உடையவராகவும், அந்த நிருவனத்தின் கீழ் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் மற்றும் உழியர்களிடம் நன்றாக பேசி பழகக் கூடியவாராகவும் இருந்தால் மட்டுமே அந்த நிருவனத்தை மிகத் திறன்பட முன்னெடுத்துச் செல்லமுடியும்.
அந்தவகையில் அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றும் டாக்டர் நக்பர் ஒரு சிறந்த திறமைசாலி என்றுதான் என்னால் கூறமுடியும். அந்தளவிற்கு அவரின் வேகத்துடன் விவேகமும் அமைந்து காணப்படுகின்றது. ஆயுள்வேத வைத்திய சிகிச்சையில் தொற்றாநோய் கிசிச்சைப் பிரிவு இங்கு அமைக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவது என்பது பாராட்டப்பட வேண்டியவையாகும் என்றார்
இப்பிரிவில் சிகிச்சை பெறவந்தவர்களுக்கு துய பசும் பாலினை இந்நிகழ்வின் பிரதம அதிதி அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் வழங்கி வைத்தார்.
வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தொற்றாநோய் தொடர்பான சிறு விளக்கத்தினை சிகிச்சைபெற வந்தவர்களுக்கு வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் தொற்றாநோய் பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் எம்.ரீ.எப்.நப்தா, பெண் விடுதி பொறுப்பதிகாரி டாக்டர் எப்.எப்.எஸ்.பரிவீன், வெளிநோயளர் பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் ஜே.எப்.எம்.நைரோஸா மற்றும் எப்.எம்.பாஹிம் ஆகியோர்கலந்துகொண்டனர்.