அதிகூடிய ஊதியம் பெறக்கூடியவர்களாக ஆசிரியர் தொழிலை மாற்ற புதிய பொறிமுறை அவசியம் !

12088082_434508256756818_7968056128995463494_n

பெற்றோர்களுக்கு  அடுத்ததாக குழந்தைகள் அனைத்து துறைகளிலும் உச்ச நிலைக்கு முன்னேற்ற  வேண்டும்  என எண்ணுபவர்கள் ஆசிரியர்கள்தான் 
அப்படிப்பட்டவர்களை நினைப்பதிலும் வாழ்த்துவதிலும் எல்லோரையும்போல் நானும் சந்தோசமடைகிறேன் 
மாணவர்களை உக்காரவைத்து தான் நின்றுகொண்டு  படிப்பு சொல்லிக் கொடுத்து ஒருமாணவனின் உயர்வு  கண்டு சந்தோசப்படும் உயரிய குணம், பண்பு ஆசிரியர்களுக்கு மாத்திரமே உரித்தானது 
ஒரு குழந்தையின் உயரிய பண்புகளோடு தாய்நாட்டின் வளர்ச்சியை  நிலைநிறுத்தும் ஆசிரியர்களின் ஊதியம் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகிறது 
புதிதாக அரச அதிகார சபைகளில் தொழில் பெறும் ஊழியர்கள் சுமார் 40000 ரூபாய் ஊதியம் பெறும்போது  20 வருட சேவை நிறைவேற்றிய ஆசிரியர்கள் அதைவிடவும் குறைவான ஊதியத்தினையே பெறுகின்றனர் 
இதனால் ஆசிரியர் தொழிலோடு வேறு தொழில்களையும் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஆசிரியர்களுக்கு  ஏற்படுகிறது 
இந்நிலையில் மாற்றம் ஏற்படுத்தி   மாணவர்களின் உயர்ச்சி மூலம் நாடு முன்னேற புதிய பொறிமுறைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் .என்று ஆசிரியர் தினத்தை யொட்டி முன்னாள் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம். சபீஸ் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.