கொண்டயாவின் மூத்த சகோதரனை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை !

சேயா சதெவ்மியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கொண்டயாவின் மூத்த சகோதரன் சமன் ஜயலத், இன்று (06) மரபணு பரிசோதனைக்கு தேவையான இரத்த மாதிரிகளை பெறுவதற்காக ஜின்டெக் நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்.

saman_jayalath1

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (05) மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

இதன் போது சுமார் 2 மணித்தியாலம் சந்தேகநபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

நன்றி – நியூஸ்