தென்ஆப்பிரிக்காவிடம் தொடரை தாரை வார்த்த இந்தியா !

 
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி ஒடிசாவில் உள்ள பாராபதி மைதானத்தில் நடைபெற்றது. முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததால் இந்த போட்டி இந்தியாவிற்கு வாழ்வா? சாவா ? போட்டியாக இருந்தது. இதனால் மைதானத்தில் 44 ஆயிரம் ரசிகர்களுக்கு மேல் குவிந்து இருந்தனர்.
223417.3

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவின் அபார பந்து வீச்சில் 92 ரன்னில் சுருண்டது. இதனால் கோபம் அடைந்த ரசிகர்கள் மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டில்களை வீசினார்கள். பின்னர் தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்தது. அந்த அணி அஸ்வின் பந்தில் சற்று தடுமாறியது. முதல் மூன்று விகெட்டுக்களையும் அஸ்வின் வீழ்த்தினார்.

South Africa's captain Faf du Plessis (R) plays a shot as India's captain Mahendra Singh Dhoni looks on during the second T20 cricket match between India and South Africa at The Barabati Stadium in Cuttack on October 5, 2015. AFP PHOTO / DIBYANGSHU SARKAR --IMAGE RESTRICTED TO EDITORIAL -- USE - STRICTLY NO COMMERCIAL -- USE--        (Photo credit should read DIBYANGSHU SARKAR/AFP/Getty Images)
அதன்பின் முதல் போட்டியை வெற்றி பெற வைத்த டுமினி, பெஹார்ட்டியன் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. தென்ஆப்பிரிக்கா அணி 11 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்திருந்தது. 9 ஓவரில் 29 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டியிருந்ததால் ரசிகர் கடும் கோபம் அடைந்தனர்.

அவர்கள் தங்கள் கையில் இருந்த தண்ணீர் பாட்டில்களை மைதானத்தில் தூக்கியெறிந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனால் மைதானத்தில் இருந்த ரசிகர்களில் பலர் வெளியேறிவிட்டனர். ரகளை செய்த ரசிகளும் வெளியேற்றப்பட்டு, தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இதனை அடுத்து 45 நிமிடங்களுக்கு பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. ஓவர்கள் குறைக்கப்படவில்லை. மீண்டும் போட்டி தொடங்கியதும் சிறப்பாக விளையாடிவந்த  பெகார்டின் 11 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த மில்லர் சிக்ஸர் அடித்து அசத்தினார். டூமினி 30 ரன்கள் எடுத்து இறுதிவரை அவுட் ஆகாமல் இருந்தார். இறுதியில் தென் ஆப்ரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

CRICKET-IND-RSA

12 ரன்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்திய அல்பி மோர்கல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்