அசாஹீம்
வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டு கழகம் வருடா வருடம் நடாததும் கே.பி.எல் கிண்ணத்திற்கான இறுதிப் போட்டியில் ஓட்டமாவடி ரேன்ஜஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
இருபது ஓவர்களைக் கொண்ட கிரிக்கட் சுற்றுப் போட்டியில் இருபத்தி நாலு கழகங்கள் கழந்து கொண்டதுடன் இறுதிப் போட்டிக்கு ஓட்டமாவடி ரேன்ஜஸ் அணியும் ஜெயந்தியாய ஸல்சபீல் அணியும் பங்கு பற்றின இதில் முதல் துடுப்பெடுத்தாடிய ரேன்ஜஸ் விளையாட்டுக்கழகம் 19வது ஓவரில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது அதனை எதிர்த்து துடுப்பெடுத்தாடிய ஜயந்தியாய ஸல்சபீல் விளையாட்டுக் கழகம் இருபது ஓவர் முடிவில் ஏழு விக்கட்டுக்களை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் துடுப்பாட்ட நாயகனாகவும் இறுதிப் போட்டி ஆட்ட நாயகனாகவும் ஓட்டமாவடி ரேன்ஜஸ் விழையாட்டுக் கழக தலைவர் எச்.எம்.றிபாஸ் தெரிவு செய்யப்பட்டார்.
வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டு கழகத்தின் தலைவர் எம்.எப்.ஜவ்பர் தலைமையில் ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற இறுதிப் போட்டி நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதுடன் அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.ரீ.அஸ்மி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பளர் எச்.எம்.றுவைத் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.