பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா இஸ்லாமிய தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் மாமறைக்கு ஒரு மாநாடு எனும்
தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்லாமிய மாநாடு இன்று 02 வெள்ளிக்கிழமை மாலை தொடக்கம் இரவு வரை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
தாருல் அதர்அத்தஅவிய்யா அமைப்பின் மார்க்கப் பிரச்சாரகர் மௌலவி பீ.எம்.அஸ்பர் (பலாஹி) தலைமையில் இடம்பெற்ற இம் மாநாட்டில் பிரபல தென்னிந்திய மார்க்கப் பிரச்சாரகர்களான அஷ்ஷெய்க் கோவை எஸ். அய்யூப் மனித குலத்திற்கு மாமறையின் அறை கூவல் எனும் தலைப்பிலும்,அஷ்ஷெய்க் அன்சார் ஹ_ஸைன் ஃபிர்தௌசி மாமனிதரின் மனித நேயக் குரல் எனும் தலைப்பிலும், அஷ்ஷெய்க் ஹாமீம் ஃபிர்தௌசி இஸ்லாமிய இனிய பண்புகள் எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
மேற்படி மாநாட்டில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பெரும் திரளான ஆண்,பெண் இஸ்லாமிய பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது ஏழை மக்களின் துயரம் துடைக்க ஏழைகளுக்கு தையல் இயந்திரமும்,ஊனமுற்றோருக்கு ஊனமுற்றோர்களுக்கான சைக்கிளும் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டதாக தாருல் அதர்அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் தலைவர் வை.பீ.ஏ.றவூப் தெரிவித்தார்.
இங்கு தாருல் அதர்அத்தஅவிய்யா அமைப்பின் பொதுச் செயலாளர் எம்.எஸ்.எம்.நஸாரினால் 14 முக்கிய விடயங்கள் அடங்கிய மாமறைக்கு ஒர் மாநாட்டின் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.
குறித்த மாநாட்டில் பொலிசார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.