எம்.வை.அமீர்
நிதி அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கை புலம்பெயர் தொழிலாளர் கூட்டனி (SLMWA) , நேற்று, தனது இருபது பக்க திட்ட வரைபை இலங்கை நிதி அமைச்சிடம் சமர்பித்தது. இந்த வரலாற்று திருப்பமுள்ள முயற்சியில் உலகளாவிய ரீதியில் இருபத்தைந்து இலங்கை புலம்பெயர் கல்விமான்கள் அடங்கிய விசேட ஆலோசனை குழு உருவாக்கப்பட்டு, அதனூடக புலம்பெயர் தொளிலாளர் நல திட்டங்கள் தயாரித்து சமர்பிக்கபட்டுள்ளது.
இதில் பின்வரும் முக்கிய அம்சங்கள் உள்ளடக்கப் பட்டுள்ளதாகவும் பிரதம அமைப்பாளர் ரகீப் ஜாபர் தெரிவித்தார்.
@ வெளிநாடுகளில் தொழில் புரியும்போது மரணித்தவர் குடும்பத்திற்கும், நிரந்தர ஊனமுற்ற புலம்பெயர் தொழிலாளர் களுக்கும் மாதாந்த கொடுப்பனவு.
@ விபத்து, காயங்கள், துஷ்பிரயோகமுற்று தொழிலை இழந்து நாடு திரும்பும் தொழிலாளர்களுக்கு, தனக்கு இன்னொரு வாழ்வாதாரம் கிடைக்கும் வரை அல்லது 6 மத காலத்திற்கு இடைக்கால மாதாந்த கொடுப்பனவு.
@ வெளிநாடுகளில் தொழில் புரியும் சாரதிகள், பணிப்பெண்கள், தொழில் தேர்ச்சியற்ற தொழிலாளர்கள், தாம் நிரந்தரமாக நாடு திரும்பும் போது அவர்களுக்கு தேவையான, சுயதொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கமாக “தீர்வையற்ற” முச்சக்கர வண்டி மற்றும் தொழில் உபகரணங்கள் ,
@ வெளிநாடுகளில் தொழில் புரியும் தொழில் தேர்சியுள்ள தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேன்படுத்த “தீர்வையற்ற” வாகன இறக்குமதி அனுமதி பத்திரம்.
@ புலம்பெயர் தொழிலாளர்களின் முதலீட்டை ஊக்குவிக்குமுகமாக, வரி சலுகையுடன் கூடிய முதலீட்டு திட்டம்.
@ புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வி அபிவிருத்திக்கான, கல்வி அபிவிருத்தி நிதியம். இதன் மூலம் வெளிநாடுகளில் இலங்கை சமூக பாடசாலைகளை நிறுவுதல், கல்வி கடன் வழங்குதல்.
@ புலம்பெயர் தொழிலாளர்களின் விமான பயண சீட்டிற்கான விசேட விலை நிர்ணயம்.
போன்ற பொருளாதார நலத்திட்டங்கள் உள்ளடக்க பட்டுள்ளன
இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டணி , புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்குரிமைக்காக குரல் கொடுத்து வருவது யாவரும் அறிந்ததே. மேலும் புலம்பெயர் சமூகத்திற்காக குரல் கொடுத்து வரும் தாம் தொடர்ந்தும் வரவு செலவு திட்டங்களிலும் . தேசிய அபிவிருத்தி திட்டங்களிலும் புலம்பெயர் தொழிலாளர் சமூகத்தை தனித்தரப்பான ஒரு பங்காளியாக இனம் காட்டி இணைத்துக்கொள்ள முயற்சி செய்யப்போவதாகவும். இந்த வரலாற்று திருப்பமுள்ள முயற்சியுடன் அனைவரும் ஒன்றினையுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.