இலங்கை கடற்பரப்பில் காணாமற்போன மீனவர்களை மீட்டுத்தருமாறு கோரி அவர்களின் உறவினர்கள் இராமேஸ்வரத்தில் முற்றுகைப் போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
இராமேஸ்வரத்திலுள்ள மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தை முற்றுகையிட்டு காணாமற்போன மீனவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தியதாக எமது இராமேஸ்வரம் செய்தியாளர் குறிப்பிட்டார்.
இந்திய மத்திய மற்றும் தமிழக மாநில அரசுகள் மீனவர்களை மீட்டுத்தரும் வரையில் கடற்தொழிலுக்குச் செல்வதில்லை என இராமேஸ்வரம் அனைத்து மீனவர் சங்கங்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை (26) கடலுக்குச் சென்று, கச்சதீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது 4 தமிழக மீனவர்கள் படகு கவிழ்ந்து நிர்க்கதிக்குள்ளாகினர்.
இதேவேளை, இதுதொடர்பில் இலங்கை கடற்படை தரப்பிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.
இலங்கை கடற்பரப்பில் நிர்க்கதியான நிலையில் கடந்த திங்கட்கிழமை (28) காப்பாற்றப்பட்ட 3 தமிழக மீனவர்கள் 29 ஆம் திகதி செய்வாய்க்கிழமை அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கமாண்டர் இந்திக டி சில்வா தெரிவித்தார்.