மக்கள் போக்குவரத்துச் செய்யும் பிரதானமான வீதி 4 கிலோ மீற்றர் தூரம் வரை குன்றும் குழியுமாக உள்ளதை எதிர்த்து மக்கள் விசனம் !

அபு அலா 

அம்பாறை – தமண பிரதேச சபைக்குட்பட்ட மலையடி பிரதேசத்துக்கு செல்லும் மிகப் பிரதானமான வீதி சுமார் 4 கிலோ மீற்றர் தூரம் வரை குன்றும் குழியுமாக காணப்பட்டு வருவதாகவும் இதனால் இப்பிரதேச மக்களும், வாகன சாரதிகளும் விசனம் தெரிவிக்கின்றனர்.

 

மலையடி பிரதேசத்துக்குச் செல்லும் பொதுமக்கள் இவ்வீதி வழியாகவே தங்களின் போக்குவரத்துக்களை மேற்கொண்டு வருவதாகவும், இவ்வீதியைத் தவிர வேறு மாற்று வீதியில்லையெனவும் இதனால் பாரிய அசௌகரியங்களை கடந்த பல மாதங்களாக எதிர்நோக்கி வருவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

DSC01434_Fotor

இதுதொடர்பில், தமண பிரதேச சபைக்கும், பிரதேச செயலாளருக்கும் பல தடவைகள் தெரிவித்தும் கூட இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் அந்த அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. இரவு வேலைகளில் அவசர வைத்திய சிகிச்சையைப் பெறுவதாக இருந்தாலும் பல சிரமங்களை எதிர்நோக்கியே செல்லவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகியுள்ளோம் என்றும் அப்பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே, அப்பிரதேச மக்கள் போக்குவரத்துச் செய்யும் இந்த வீதியை குறிப்பிட்ட அதிகாரிகள் தங்களின் கவனத்திற் கொண்டு செப்பனிட்டுக்கொடுக்க முன்வரவேண்டும்.

DSC01433_Fotor