சிரியாவில் ISIS தீவிரவாத அமைப்புகளின் இனங்காணப்பட்ட இலக்குகள் மீது ரஷ்யப் படையினர் வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர்.
ISIS தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் சிரியாவிற்கு இராணுவ உதவிகளை வழங்குவதாக ரஷ்யா இன்று இணக்கம் தெரிவித்திருந்தது.
இந்நிலையிலேயே இந்த வான்வழித் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக தமக்கு ஆதரவு வழங்குமாறு சிரிய அதிபர் பஷார் அல் அசாத், ரஷ்யாவிடம் ISIS இற்கு எதிரான போரில் தமக்கு இராணுவ உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், ரஷ்யாவின் Federation Council சிரியாவிற்கு ஆதரவளிக்க முன்வந்ததைத் தொடர்ந்தே ரஷ்ய அதிபர் சிரியாவிற்கு தமது விமானப் படையினரை அனுப்பத் தீர்மானித்தார்.