(வீடியோ) அதிகாரத்தோடு கஃபாவினை தவாப் செய்யும் சவூதி மன்னரின் மகன் !

அஹ்மத் இர்ஷாட் 

வீடியோ மன்னர் மகனின் தவாப்பும் மினாவில் இடம்பெற்ற நெரிசலும்

சவூதி மன்னர் சல்மானின் மகன் புனித கஃபதுல்லாவினை தவாப் செய்யும் முறையானது எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் விடயமாக இருக்கின்றது. அதாவது தன் மட்டும் தவாப் செய்யும் படியாக ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை கஃபதுல்லாவினை வளைத்து தனது பாதுகாப்பிற்காக இடைநிறுத்தி தான் தாவாப் செய்யும் வரைக்கும் கஃபதுல்லாவிலிருந்து 50 மீற்றருக்கு அப்பாலேயே பொது மக்கள் தாவாப் செய்யும் காட்சியினை இங்கே பதிவேற்றப்பட்டிருக்கும் காணொளியில் காணக்கூடியதாக இருக்கின்றது.

saudi_raja_2287168_2287885f

இறுதித் தூதர் ரசூல் (ஸல்) உட்பட ,உமர் (ரழி), அபூபக்கர், உஸ்மான்(ரழி), அலி (ரழி) போன்ற முக்கியமான கலீபாக்கள் கூட சாதாரணமகவே தங்களது ஹஜ்கடமைகளையும், தவாப் செய்யும் முறைமையினையும் மேற்கொண்டுள்ள அதே சமயம். எல்லொருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டிய சவூதி மன்னர் சல்மானின் மகன் இவ்வாறு கஃபதுல்லாவினை வளைத்து இராணுவத்தினை குமித்து தவாப் செய்யும் முறைமையானது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகவே இருக்கின்றது.

New Saudi deputy crown prince appointed after royal decree

 

ஆனால் அண்மையில் மினாவில் ஒழுங்கு முறையான பதுகாப்பும் நாலா பக்கமும் கல்லெறிந்து விட்டு வெளியேறக்கூடியவாறு பாதைகள் ஒழுங்கு முறையாக இருக்காமையே நெரிசலில் அதிகப்படியான மக்கள் மரணிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதற்கு சில வாரங்களுக்கு முன்னரே கஃபதுல்லாவினை சுற்றிக்காணப்படும் கட்டட திருத்த வேலைக்களுக்கு பயண்படுத்தப்பட்ட இராட்சத கிரேனர் சரிந்து விழுந்ததினால் பாரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டிருந்தும் அதனை கருத்தில் கொண்டாவது இம்முறை ஹஜ் யாத்திரியர்களுக்கு பாரிய பாதுக்காப்பு வழங்கப்படும் என எதிர்பார்த்தும் மினாவில் இவ்வாறானதொரு பாரிய இழப்பு ஏற்பட்டமையானது சவூதி அரசாங்கத்தின் மீது பழிசுமத்தப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது.

964760-MinaAFP-1443588129-850-640x480