சந்திரிக்கா மீதான குண்டுத்தாக்குதல் நிகழ்த்திய குற்றவாளிக்கு 300 ஆண்டு சிறைத்தண்டனை!

chanthirka

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீது 1999ஆம் ஆண்டு குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்ட சம்பவத்தின் இரண்டு பிரதிவாதிகளை குற்றவாளிகளாக அறிவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உதயன் என்றழைக்கப்படும் வேலாயுதன் வரதராஜா மற்றும் சந்திரா ஐயர் ரகுபதி சர்மா ஆகியோரே இந்த வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.

உதயன் என்றழைக்கப்படும் வேலாயுதம் வரதராஜாவிற்கு 290 வருட கடூழிய சிறைத் தண்டனையும், சந்திரா ஐயர் ரகுபதி சர்மாவிற்கு 300 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு தண்டனைகளையும் 30 ஆண்டுகளில் அனுபவிக்கும் வகையில் விதிக்கப்பட்டுள்ளது.

சந்திரா ஐயர் ரகுபதி சர்மாவின் மனைவியான வசந்தி ரகுபதி சர்மா இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி என் ரணவக்க இந்த வழக்கின் தீர்ப்பை இன்று அறிவித்திருந்தார்.