அசாஹீம்
வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களுக்கு கடந்த நான்கு மாத சம்பளமும் முப்பது வீத நிலுவையும் வழங்கப்பட வில்லை என்று கடந்த 18.09.2015ம் திகதி தொடக்கம் கடதாசி ஆலைக்கு முன்பாக அமைதியான முறையில் நடாத்தி வந்த ஆர்ப்பாட்டம் இன்று (29.09.2015) ஆலையின் கூரையின் மேல் ஏறி தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.
கடந்த ஜூலை மாத சம்பளம் இரண்டு தடவைகளில் 70 வீதம் வழங்கப்பட்டதுடன் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுமாக இரண்டு மாதத்திற்கான சம்பளமும் 2014ம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான சம்பள நிலுவை உட்பட நான்கு மாத முழுச் சம்பளமும் 30 வீத நிலுவையும் வழங்;கப்பட வேண்டிய நிலையிலயே ஊழியர்கள் கடந்த 18.09.2015 தொடக்கம் ஆலைக்கு முன்னாள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலயே இன்று ஆலையின் கூறையின் மேல் ஏழு ஊழியர்கள் ஏறி தங்களது சம்பளம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர்.
நாங்கள் எங்களது சம்பள நிலுவையைக் கேட்டு கடந்த 18.09.2015ம் திகதி தொடக்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம் ஆனால் எங்களுக்கான எந்தத் தீர்வும் கிடைக்க வில்லை கடதாசி ஆலை அமைச்சர் றிஸாட் பதியுதீனின் அமைச்சின் கீழ் வருகின்றது அமைச்சர் றிஸாட் பதியுதீன் ஊழியர்கலாகிய எங்களது சம்பளப்பிரச்சினையை கருத்திற் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் என்று கடதாசி ஆலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.