அஸ்ரப் ஏ சமத்
திறன் அபிவிருத்தி தொழில் பயிற்சி அமைச்சா் மகிந்த சமரசிங்க மற்றும் அந்த அமைச்சின் இராஜாங்க அமைச்சா் பாலித்த ரங்க பண்டார ஆகியோா் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டனா். அங்கு ஜேர்மண் அரசினால் நிர்மாணிக்கப்படும் ஜேர்மாண் தொழில்நுட்பக் கல்லுாாியின் கட்டுமாணத்தையும் பாா்வையிட்டனா். இதனால் வடக்கில் உள்ள இளைஞா்கள் தமது தொழில் நுட்பக் கல்வியை மேம்படுத்துவதற்கே இந்தக் கல்லுாாி நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
இக் தொழில்நுட்பக் கல்லுாாியில் நிர்மாண வேலைகள் முடிவடைந்ததும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தங்கியுள்ள இளைஞா் யுவதிகளுக்கு தொழில் நுட்ப பயிற்சிகளை பயின்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழில் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் பல தொழில் நுட்ப பயிற்சிகள் பயிற்றுவிக்கப்பட உள்ளன. கணனி, உல்லாச பிராயாண ஹோட்டல்கள் உணவு தயாரிப்பு, இலக்ரோணிக், இலக்ரிக்கல், போன்ற துறைகள் இப்பிரதேச இளைஞா்கள் பயிற்றுவிக்க உள்ளனா்.
இத்திட்டத்தினை தெழில் பயிற்சி அதிகார சபை மற்றும் ஜேர்மன் அரசு இணைந்து மேற்கொள்கின்றது.