அஸ்லம் எஸ்.மௌலானா
முஸ்லிம்கள் அனைவரும் இஸ்லாமிய வாழ்க்கை முறையை கடைப்பிடித்து, ஒற்றுமையை பேணுவதன் மூலமே எமது சமூகத்திற்கு எதிரான சதிகளை முறியடிக்க முடியும் என ரெஸ்ட் ஹவுசஸ் லிமிட்டட் பணிப்பாளரும் கல்முனை மாநகர முதல்வரின் விசேட ஆலோசகருமான லியாகத் அபூபக்கர் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;
அல்லாஹ்வின் ஆணையை ஏற்று புனித இஸ்லாம் மார்க்கத்தி இறுதிக் கடமையான ஹஜ் கடமை நிறைவேற்றப்பட்டிருப்பதை முன்னிட்டு நாம இந்த ஈகைப் பெருநாளை மிகவும் அமைதியான சூழலில் கொண்டாடுகின்றோம்.
இப்புனிதத் திருநாளில் உலகளாவிய ரீதியில் போர் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் துன்பப்படுகின்ற எமது சகோதரர்களின் துயரங்களை நீக்கி அவர்கள் நிம்மதியான வாழ்வுக்குத் திரும்ப அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.
உலகில் முஸ்லிம்களின் ஒற்றுமையினை குலைத்து எமது சமுதாயத்தினை பாரிய அழிவுப் பாதையை நோக்கி வழி நடத்த பல சதித் திட்டங்கள் அரங்கேற்றப்படுகின்ற இவ்வேளையில் நாம் நமக்குள் பிளவுகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் ஹஜ் கற்றுத் தருகின்ற போதனையின் பிரகாரம் ஒன்றிணைவது காலத்தின் தேவையாகும்
உலக வாழ்வின் யதார்த்தத்தை உணர்ந்து அண்ணல் நபி முகம்மது (ஸல்) அவர்களின் போதனைக்களுக்கேற்ப எமது வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்ள இந்நந்நாளில் முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் திடசங்கற்பம் பூணுவோமாக.