கல்முனை மாநகர சபை உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மானின் துரித நடவடிக்கையால் திவிநெகம பயனாளிகளுக்கான கொடுப்பனவு வழங்கப்படுகின்றது!

பி.எம்.எம்.ஏ.காதர்

 

கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மருதமுனை,நற்பிட்டிமுனை திவிநெகும பயனாளிகளுக்கு கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்டாதிருந்த திவிநெகும உதவிக் கொடுப்பனவு தற்போது மருதமுனை-நற்பிட்டிமுனை திவிநெகும சமுதாய அடிப்படை வங்கியில் வழங்கப்பட்டு வருகிறது.

images

 

கல்முனை மாநகர சபை உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் அம்பாறை மாவட்டச் செயலாளர் மற்றும் திவிநெகும திணைக்களத்தின் மாவட்ட உதவி ஆணையாளர் ஆகியோரின் கவனத்திற்கு இந்த விடையத்தை கொண்டு சென்று முஸ்லிம் மக்களின் ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு இந்தக் கொடுப்பனவுகள் உடனடியாக வழங்கப்ட வேண்டும் என றஹ்;மான் கோரிக்கை விடுத்திருந்தார்.

3-ZAH RAHMAN-MMC-23-09-2015

இந்த உதவிக் கொடுப்பனவு கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்படாதிருந்த நிலையில் திவிநெகும பயனாளிகள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மானின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து இஸட்.ஏ.எச்.றஹ்மான் எடுத்த துரித நடவடிக்கையின் பயனாக இந்தக் கொடுப்பனவு தற்போது வழங்கப்பட்டுவருவதாக றஹ்மான் தெரிவித்தார்.
மருதமுனை-நற்பிட்டிமுனை திவிநெகும சமுதாய அடிப்படை வங்கியின் கீழ் 3067 குடும்பங்கள் இந்த திவிநெகும உதவிப்பணத்தைப் பெற்று வருகின்றனர் இவர்களுக்கான கொடுப்பனவு திவிநெகும திணைக்களத்தின் மூலமாக ஒவ்வொரு மாதமும் 5ம் திகதி மருதமுனை-நற்பிட்டிமுனை திவிநெகும சமுதாய அடிப்படை வங்கிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது
இருந்த போதிலும் இக் கொடுப்பனவுகள் அந்தந்த மாதம் வழங்கப்படாமல் நிலுவையாக இருந்து வருவதாகவும் இதனால் இந்த திவிநெகும உதவியை நம்பி வாழ்கின்ற குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் மாநகர சபை உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியதாகவும் இனிமேல் அந்தந்த மாதம் கொடுப்பனவுகளை கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

2-MMM MUBEEN-23-09-2015

இவ்விடையம் தொடர்பாக மருதமுனை-நற்பிட்டிமுனை திவிநெகும சமுதாய அடிப்படை வங்கியின் முகாமையாளர் எம்.எம்.எம்.முபீன் அவர்களுடன் நேரடியாக வினவினேன் திவிநெகும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் அந்தந்த மாதமே பயனாளிகளின் கணக்கிற்கு வரவு வைக்கப்புகின்றது சிலர் அந்த மாதமே பணத்தை மிளப் பெறுகின்றார்கள் சிலர் அடுத்த மாதத்துடன் சேர்த்துப் பெறுகின்றார்கள் கடன் பெற்றவர்கள் கடனில் களித்து விடுகின்றார்கள் பணத்தை மீளப் பெறாவர்களுக்கான கொடுப்பனவு கடந்த 6ம்,7ம்,8ம் மாதங்களுடன் இம் மாதக் கொடுப்பனவுடன் நான்கு மாதங்களுக்கான கொடுப்பனவுகள் தற்போது வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.