சிரியாவில் ஏற்பட்டுள்ள யுத்தத்தை நிறுத்த ரஷ்யாவுடன் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 4 வருடங்களாக இந்த யுத்தம் இடம்பெற்று வருகிறது. இதனால் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் யுத்தத்தை நிறுத்த ராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளில் ரஷ்யாவின் ஜனாதிபதி விளாட்டிமிர் புட்டின் ஈடுபட வேண்டும் என்று ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.