25வது தொற்றாநோய் சிகிச்சை நிகழ்வு !

அபு அலா 

அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியாலையின் 25வது தொற்றாநோய் சிகிச்சை நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை (22) வைத்தியசாலையின் தொற்றாய்நோய் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவிச் செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு தொற்றாநோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற வந்தவர்களுக்கு தூய பசும்பால் வழங்கி வைத்தார்.

c_1_Fotor

அதனைத் தொடரந்து, வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பரினால் பிரதம அதிதிக்கு தொற்றாநோய் சிகிச்சை தொடர்பில் மிகத்தெளிவான விளக்கத்தினை வழங்கி வைத்தார்.

 

இந்நிகழ்வில் வைத்தியசாலையின் பெண் விடுதி பொறுப்பதிகாரி எப்.எப்.எஸ்.பரிவீன், வெளிநோயளர் பிரிவு பொறுப்பதிகாரி ஜே.எப்.எம்.நைரோஸா, ஆண் விடுதி பொறுப்பதிகாரி டாக்டர் எம்.பி.எம்.றஜீஸ் ஆகியோர் இதில் பங்கேற்றிருந்தனர்.

c_Fotor

 

இதேவேளை தொற்றாநோய் சிகிச்சை ஆரம்பித்து வைக்கப்பட்டு சிகிச்சை பெற வந்தவர்களுக்கு வைத்திய ஆலோசனைகளை தொற்றாநோய் பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் எம்.ரீ.எப்.நப்தா மற்றும் எம்.என்.எப்.நிஸ்மியா ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டது.