ஜவ்பர்கான்
காத்தான்குடி பிரதேசத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கடலரிப்பினால் கடற்கரையோரங்களில நடப்பட்டிருந்த தென்னை மரங்கள் அழிந்து விழுந்துள்ளதுடன் பல கோடி ரூபாய் பெறுமதியான அரச சொத்துக்கள் அழிவடையும் நிலையை எதிர்கொண்டுள்ளன.
காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையோரம் கடலரிப்பு பாரியளவில் உள்ளதால் கடற்கரையோரம் கடற்றொழில் அமைச்சினால் 2 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப் பட்டுள்ள எரிபொருள நிரப்பு நிலையம் முற்றாக அழிவடையும் நிலையை எதிர் கொண்டுள்ளது.
இன்னும் சில அடிகள் கடலரிப்பு ஏற்படுகின்றபோது குறித்த நிலையம் முற்றாக நீரில் மூழ்கி அழிவடையும் நிலை உருவாகியுள்ளது.
பல்லாயிரம் மக்களின் ஜீவனோபாயமும் இக்கடலரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே குறித்த கடலரிப்பை தடுக்க கடற்றொழில் திணைனக்களம் நடவடி;கைகளை மேற்கொள்ள வேண்டுமென பிரதேச வாசிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.