”2015 ஆம் ஆண்டின் “வைத்திய அத்தியட்சகர்” கிரிகெட் சுற்றுப்போட்டி சம்பியன் !

அபு அலா 

அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் 2015 ஆம் ஆண்டுக்கான “வைத்திய அத்தியட்சகர்” கிண்ண அணிக்கு 6 பேர் கொண்ட 6 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு அணியினர் 2 விகெட்டுக்களினால் வெற்றிபெற்று இவ்வருடத்துக்கான சம்பியன் பட்டத்தை தனதாக்கிக்கொண்டது.

1_Fotor

அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு அணியினருக்கும், ஆண்கள் விடுதி பிரிவு அணியினருக்குமிடையிலான 06 ஓவர்கள் கொண்ட இப்போட்டி அம்பாறை மாவட்ட மலையடி மைதானத்தில் நேற்றுஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்றது.

இதன்போது நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆண்கள் விடுதி பிரிவு அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடி 06 ஓவர்களில் சகலவிக்கட்டுக்களையும் இழந்து 42 ஓட்டங்களைப் பெற்றது.

2_Fotor

இதில் யூ.கே.சம்சுதீன் 16 ஒட்டங்களையும் ஏ.ஜீ.பாஹிம் 12 ஓட்டங்களை பெற்றதுடன் உதிரிகளாக 14 ஓட்டங்களும் பெறப்பட்டன.வெளிநோயாளர் பிரிவு அணியைச் சேர்ந்த பைஷல் இஸ்மாயில் 02 ஓவர்கள் பந்து வீசி 20 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும்,நசிப் சப்னாஸ் 03 ஓவர்கள் பந்து வீசி 16 ஓட்டங்களுக்கு 01 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய வெளிநோயாளர் பிரிவு அணியினர் 05 ஓவர்களில் 02 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கைஅடைந்தது. 

இதில் நசீப் சப்னாஸ் ஆட்டமிழக்காது 25 ஓட்டங்களையும் எஸ்.எல்.அனீஸ் 10 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். ஆண்கள் விடுதி ஆணியின் சார்பில் பந்து வீசிய யூ.கே.சம்சுதீன் 02 ஓவர்கள் பந்து வீசி 20 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டையும், ஏ.ஆர்.றிம்சான் 01 ஓவர் பந்து வீசி 13 ஓட்டங்களுக்கு 01 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

3_Fotor

இந்த மென்பந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் வெளிநோயாளர் பிரிவு அணியினர் 2 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்று அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் இவ்வருடத்துக்கான சம்பியனாக தெரிவு செய்யப்பட்டதுடன் 2015 ஆம் ஆண்டுக்கான “வைத்திய அத்தியட்சகர்” கிண்ணத்தையும் தனதாக்கிக்கொண்டது. 

இதில் சிறந்த துடுப்பாட்ட வீரராக வெளிநோயாளர் பிரிவு அணியைச்  சேர்ந்த நசீப் சப்னாசும், சிறந்த பந்த வீச்சாளராக பைஷல் இஸ்மாயில் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். 

இந்நிகழ்வின் பிரதம அதிதி பொருளாதார அபிவிருத்தி அதிகாரி எஸ்.முனவ்வர் “வைத்திய அத்தியட்சகர்” சம்பியன் கிண்ணத்தையும், இரண்டாமிடம் பெற்ற ஆண்கள் விடுதி பிரிவு அணிக்குரிய கிண்ணத்தை கௌரவ அதிதி யூ.கே.சம்சுதீன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.