எஸ்.அஷ்ரப்கான்
ஷரீயா சட்டத்தை பாராளுமன்றத்தில் கிண்டலடித்த ரஞ்சன் ராமநாயக்க இப்போது அதே ஷரீயா சட்டத்தைஇலங்கையில் கொண்டு வர வேண்டும் என கூறுவதன் மூலம் இஸ்லாமிய சட்டங்கள் எல்லா காலத்துக்கும்எல்லா நாட்டுக்கும் பொருத்த்மானவை என்பது தெளிவாகியுள்ளது என உலமா கட்சித்தலைவர் கலாநிதிமுபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து பற்றிய ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் முபாறக்மௌலவி மேலும் தெரிவித்ததாவது,
கற்பழிப்பு, சிறுவர் துஷ்பிரயோகம் போன்றவற்றுக்கு இஸ்லாம் கூறும் பகிரங்க மரண தண்டனைகொண்டுவரப்பட வேண்டும் என அமைச்சர் ரஞ்சன் போன்றோர் கூறுவது வரவேற்கத்தக்க விடயமாக இருப்பினும் குற்றங்கள் நடைபெறுவதற்கான தூண்டுதல்களை இஸ்லாம் கூறும் பிரகாரம் ஒழிக்காமல்ஷரீயா சட்டத்தை நடைமுறை படுத்தும் படி இஸ்லாம் சொல்லவில்லை. கற்பழிப்புக்கு மரண தண்டனைவழங்கும் இஸ்லாம் அதனை தூண்டும் வகையில் ஆடை அணியும் பெண்களுக்கு பகிரங்க கசையடியைவலியுறுத்துகிறது.
இன்று நமது நாட்டை பார்த்தால் பெண்களின் நடை உடை கற்பழிப்பை மாலையிட்டு வரவேற்பதாகவேஉள்ளது.
ச ஊதியை பொறுத்த வரை அங்கு ஆபாச சினிமாக்களுக்கு பகிரங்க தடை. அதே போல் தொடைகளையும்மார்பகங்களையும் காட்டி ஆடை அணியும் பெண்களுக்கும் தடை உள்ளது. அதே போல் பத்திரிகைபோன்றவற்றில் அரை குறை ஆடை அணிந்த பெண்களின் படங்களை பிரசுரிப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு துஷ்பிரயோகத்துக்குரிய அனைத்து வழிகளையும் அடைத்து விட்டே மரண தண்டனையையும் நடை முறை படுத்துவதால் அதன நியாயம் என நாம் ஏற்கிறோம். அத்துடன் ஒருவரைகுற்றவாளியாக்குவதில் நிரபராதியாக்குவதில் நமது நாட்டில் பொலிசாருக்கே முழு உரிமை உண்டு. பயங்கரவாதத்தில் ஈடுபடாத பல இளைஞர்களை புலிகள் என சிறைக்கு அனுப்பியதில் நமது நாட்டுபொலிசார் சாதனை செய்தவர்கள். அதே போல் குற்றவாளி என தெரிந்தும் அவரை நிரபராதி என விட்டுவைத்திருப்பதையும் அவருக்கு ராஜ மரியாதை செய்வதையும் கூட காண்கிறோம். இதையெல்லாம் ச ஊதியில் காண முடியாது. அங்கு பொலிசாருக்குக்கூட பகிரங்க மரண தண்டனை வழங்கப்படுகிறது. ஒருஅப்பாவியை குற்றவாளி என குற்றம் சாட்டி அதனை நிரூபிக்க முடியாது போனால் குற்றம் சாட்டியவருக்குபகிரங்க கசையடியை இஸ்லாம் வலியுறுதியபடி அந்நாட்டில் காண்கிறோம். அது பொலிசாக இருந்தாலும்ஒரே சட்டம்தான். இவற்றையெல்லாம் முதலில் அமுல் படுத்தாத வரை வெறுமனே மரண தண்டனைசட்டத்தை கொண்டு பல மாற்று அரசியல்வாதிகள் தூக்கில் தொங்க வேண்டி வரும். அத்துடன் இனவாத சிந்தனை அதிகம் உள்ள பொலிசாரால் சிறுபான்மை மக்கள் போலி குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனைவழ்ங்கப்படலாம்.
ஆகவே மரண தண்டனை நிஅரைவேற்றும் சட்டத்தை கொண்டு வருமுன் முழங்கால், தொடைபோன்றவற்றை, மார்பகங்களை பிதுக்கிக்கொண்டும் பெண்கள் ஆடை அணிவதையும் அவ்வறான பெண்களின் படங்கள் ஊடகங்களில் வெளியிடுவதையும் தடை செய்யும் சட்டத்தை பாராளுமன்றத்துக்குகொண்டு வரும் தைரியம் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உண்டா என கேட்பதோடு அதற்குரிய முயற்சிகளை எடுக்கும்படி உலமா கட்சி அவரை கேட்டுக்கொள்கிறது என முபாறக் மௌலவி தெரிவித்தார்.