பொலிஸ் திணைக்களத்தின் பிரச்சினைகளை கண்டறிவதற்கு விஷேட குழுவொன்று நியமிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும் பொலிஸ் உயராதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்றது.
பொலிஸ் உத்தியோகத்தர்களின் பதவி உயர்வு, சம்பளப் பிரச்சினைகள் தொடர்பாக இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த அனைத்து பிரச்சினைகளும் விரைவில் தீர்வு வழங்க வேண்டிய நியாயமான பிரச்சினைகளாக தான் கருதுவதாகவும், ஒரு மாத காலத்திற்குள் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது அரசியல் அழுத்தங்கள் இன்றி கடமைகளை சரிவர நிறேவேற்றுவதற்கான சந்தர்ப்பத்தினை பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்கியமைக்காக ஜனாதிபதிக்கு கௌரவத்தையும் நன்றிகளையும் தெரிவிப்பதாக பொலிஸ்மா அதிபர் என். கே. இளங்ககோன் இதன்போது தெரிவித்தார்.