இலங்கைத் தமிழர் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்று தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா பிரேரணை ஒன்றை தாக்கல் செய்தார்.
இலங்கை மீது பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்தால் அதைமாற்ற இந்தியா ராஜதந்திர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பது தெரிந்தால், இந்தியா, ராஜதந்திர ரீதியில் அமெரிக்காவை தன்பக்கம் இழுத்து, இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்த வேண்டும் என்று, இந்திய பேரரசை, தமிழக சட்டப்பேரவை கேட்டுக்கொள்கிறது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அனைத்து கட்சி உறுப்பினர்களும் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்து பேசிவருகிறார்கள். எனவே, இன்றே தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்றும், ஒரு மனதாக தீர்மானம் நிறைவேறும் என்றும் தெரிவிக்ப்படுகிறது.
இலங்கைக்கு தொடர்பான பிரேரணை ஒன்று ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்தநிலையில், தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்றை தாக்கல் செய்தார்.