சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட முயற்சி செய்தோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை இறுதிக் கட்டப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கை இன்று ஐக்கிய நாடுகள் சபையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
ஆரம்பத்தில் அமெரிக்க அரசால் முன் மொழியப்பட்ட தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக, சர்வதேச விசாரணை தேவை என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது தன் நிலையை மாற்றிக் கொண்டுள்ள அமெரிக்கா, உள்நாட்டு விசாரணையே போதும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில் உள்நாட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டால், பாதிக்காப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களுக்கு உரிய நீதி கிடைக்காது என பலரும் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், இன்று திராவிட விடுதலைக் கழகம், மற்றும் தமிழ்த் தேசிய விடுதலைக் கழகத்தை சேர்ந்தவர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகை செய்ய முயற்சி செய்தனர்.