பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் திருகோணமலை மாவட்டத்திற்கும் வன்னி மாவட்டத்திற்கும் வழங்கப்படவுள்ளதாக கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியினால் முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்கப்பட்டுள்ள தேசியப் பட்டியல் இரண்டையும் எந்த மாவட்டங்களுக்கு பங்கிடுவது என்ற இறுதி முடிவுக்கு முஸ்லிம் காங்கிரஸின் தலைமை பீடம் வந்திருப்பதாக தெரியவருகிறது.
அதன் பிரகாரம் திருகோணமலை மாவட்டத்திற்கும் வன்னி மாவட்டத்திற்கும் தேசியப் பட்டியல் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில், தேர்தல் காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் கல்குடா, காத்தான்குடி, மற்றும் அட்டாளைச்சேனை போன்ற பிரதேசங்களுக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற பிரதி நிதித்துவம் வழங்கப்படும் என வாக்குறுதியளித்திருந்தார்.
இதனால் இப் பிரதேசங்களை மையப்படுத்தி தேர்தலில் பலர் குதித்திருந்தனர். இப்போது இக் கட்சியின் முடிவால் ஏமாற்றம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
நன்றி – வீரகேசரி