இலங்கையில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது : நரேந்திர மோடி !

இலங்கையில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஒருங்கிணைந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இன்று பிற்பகல் நடத்தினர்.

375362-modi

இரு நாடுகளினதும் பிரதமர்களுக்கு இடையே இன்று முற்பகல் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையினை அடுத்து இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.

இலங்கையில் 17 ஆம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை வரவேற்பதாகவும் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கையின் அரசியல் அமைப்பிற்கு அமைய அதிகாரப் பகிர்வுக்கான இயலுமை குறித்து ஆராயவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் சந்தித்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

நாளை இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்திக்கவுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிற்பகல் வேளையில் நாடு திரும்பவுள்ளார்.