அக்கரைப்பற்று மாநகரசபை, பிரதேசசபை போன்றவற்றினை எமது கட்சியும் எமது தலைவரும் இணைந்து தெரிவு செய்யவுள்ளார்கள் !

சப்றின்

கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகளை தேசிய காங்கிரஸ் நிவர்த்தி செய்து மீண்டும் கட்சிப் பணிகளை முன்னெடுத்துச் செல்லும் என உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சின் முன்னாள் பொதுசனத் தொடர்பு அதிகாரியும், அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.எம்.சபீஸ் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று ஓன்ஸ் மோர் நிறுவன மண்டபத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற பத்திரிகையாளர்களுடனான கலந்துரையாடலின் போதே மேற்படி தெரிவித்தார்.

11998825_428431950697782_3375385840213876807_n_Fotor

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில் – தேசிய காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு உரிய காரணங்களை இனங்கண்டுவருகிறோம். அதனை நிவர்த்தி செய்வதற்குரிய வழிவகைகளையும் தற்போது மேற்கொண்டுவருகிறோம். கடந்த காலங்களில் நாம் விட்ட தவறுகள் தொடர்பாக ஆலோசனை பெறுவதற்கே ஊடகவியலாளர்களாகிய உங்களை அழைத்திருக்கிறேன்.

 

எதிர்வரும் காலங்களில் மக்களோடு மக்களாக இணைந்து எமது பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்காக நன்றி நவிலல் கூட்டங்களை நடாத்திவருவதுடன், பாரிய அளவிலான இளைஞர் மாநாடு ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளோம். அதன் முன் நடவடிக்கையாக இளைஞர்களையும், ஏனையவர்களையும் சந்தித்து வருகிறோம்.

 

இதன் பின்னர் எமது தேசிய காங்கிரசின் தேசியத் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் வழிகாட்டலில் அனைத்து பணிகளையும் மக்களுக்கான முன்னெடுத்துச் செல்லவுள்ளோம். அவ்வாறான நிலைமையின் பின்னர் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்நோக்கவுள்ளது எமது தேசிய காங்கிரஸ். அக்கரைப்பற்று மாநகரசபை, அக்கரைப்பற்று பிரதேசசபை போன்றவற்றினை சிறந்த முறையில் கொண்டு செல்லக்கூடியவர்களை எமது கட்சியும் எமது தலைவரும் இணைந்து தெரிவு செய்யவுள்ளார்கள் என மேலும் தெரிவித்தார்.

12011117_428431990697778_1377118634765308066_n