பதவியேற்பு !

அஸ்ரப் ஏ சமத்

கிராமிய பொருளாதார பிரதியமைச்சராக எம்.எஸ்.எஸ் அமீா் அலி மருதானையில் உள்ள கிராமிய பொருளாதார அமைச்சில் இன்று கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டாா். 
இந் நிகழ்வின்போது – கிராமிய பொருளாதார அமைச்சா் பீ. ஹரிசன் கைத்தொழில் வா்த்க அமைச்சா்  றிசாத் பதியுத்தீன்.  இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம். பௌசி  மற்றும் பராளுமன்ற உறுப்பிணா்  எம்.எச்.எம் நவவியும் கலந்து கொண்டாா்கள்.
1iii_Fotor
கடமைகளை பாரமெடுத்தன் பின் ஊடகங்களுக்கு  உரையாற்றிய பிரதியமைச்சா்  –
 நான் ஏற்கனவே   மீள்குடியேற்ற பிரதியமைச்சா்  மற்றும் அணா்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சா்  மற்றும் வீடமைப்பு சமுா்த்தி பிரதியமைச்சராக கடமையாற்றியுள்ளேன்.  நான்காவது தடவையாகவும் இந்த பிரதியமைசராக இந்த அமைச்சினை இன்று பாரம் ஏற்பதாகத் தெரிவித்தாா்.
பிரதியமைச்சா் மேலும் அங்கு உரையாற்றுகையில் 
yyy_Fotor 12222_Fotor
இந் நாட்டில் வாழும்  கிராமிய மக்களது  வாழ்க்கையை மேம்படுத்தும் ஒரு சிறந்ததொரு அமைச்சுதான் கிராமிய பொருளாதார  அமைச்சாகும்.  இந்த அமைச்சிக்கு அனுராதபுரம் பாராளுமன்ற  பிரநிதி அமைச்சா் பீ. ஹரிசன் அவா்களின் கீழ் பிரதியமைச்சராக செயல்படுவதற்கும் நான் மிகவும் சந்தோசமடைகின்றேன். அவா் சிறந்த மக்கள் சேவகன், ஜ,தே.கட்சியின் வெற்றிக்காக பாடு படும் ஒருவா்.
இந்த அமைச்க்கான  இட வசதிகள் போதாமல் இருந்தாலும் இந்த அமைச்சுக்குரிய கிராமிய பொருளாதார செயற்படுத்தும் ஏனைய  பகுதிகள் மேலும் 3 அமைச்சின் கீழ் உள்ளன என செயலாளா் தெரிவித்தாா். . அவற்றையெல்லாம் ஒன்று  சோ்த்து  சிறந்ததொரு ஆளணியைக் கொண்டு இந்த அமைச்சினைக் கட்டியெழுப்பமுடியும்.
 
இந்த அமைச்சின் கீழ் தான்  சகல கிராமத்து மக்களது பொருளாதாரத்தை மேம்படுத்தும் சேவைகள்  உள்ளன.   அமைச்சின் அதிகாரிகளது சேவைக்ககா  2 4 மணித்தியாலயமும் தான் தயராக இருப்பதாகவும்  எனது கைத்தொலைபேசி  திறந்தே இருக்கும்.  
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமந்திரி ரணில் விக்கிரமசிங்க ஆகியோா்களது சிந்தனையில் உதித்த மக்களது சேவைக்கான நல்ல பல  திட்டங்களை   ஆற்றி  என்னை முழுமையாக அர்ப்பணிப்பேன் என  பிரதியமைச்சா் அமீா் ்அ்லி  அங்கு உரையாற்றினாா்.