விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எச். ஹரிஸ் கொழும்பு 7 ல் உள்ள விளையாட்டுத்துறை அமைச்சில் இன்று கடமைகளை ஏற்றுக் கொண்டார். இந் நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிரி ஜயசேகர ஸ்ரீ.ல.மு. காங்கிரஸ் தலைவா ரவுப் ஹக்கீம், கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.