பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இந்தியாவுக்கு விஜயம் செய்கிறார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரிலேயே அவர் அங்கு பயணம் செய்வதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன்போது இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, வௌிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோருடன், ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.
மேலும் இந்த விஜயத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம உள்ளிட்ட குழுவினரும் கலந்து கொள்கின்றனர்.
இதேவேளை பிரதமரின் இந்தியப் பயணத்தை முன்னிட்டு இலங்கையில் கைதுசெய்யப்பட்டுள்ள 16 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.