இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமல்ல தியாகத்தால் வளர்ந்த மார்க்கம் !

வை.எம்.பைரூஸ் வாழைச்சேனை

 இன்று  உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் பற்றிய தப்பபிப்பிராயமும் இஸ்லாம் மார்க்கம் பற்றிய தப்பென்னமும்  நாளுக்கு நாள் அந்திய மதத்தவர்களிடம் கூடிக்  கொண்டிருப்பதை எம்மால் அறிய முடிகிறது உண்மையி்ல் இதற்கான முக்கிய காரணம் உலகத்தின்  சக்தி வாய்ந்த ஊடகங்கள் எழுத்தாளர்கள் எல்லாம்  இஸ்லாத்தின் வளர்ச்சி பிடிக்காததன் காரணமாக உலகத்தை இஸ்லாம் ஆட்சி செய்து விடுமே என்ற அச்சத்தில் ஏதோ சிலர் செய்கின்ற தவறுகளை மாத்திரம்  சுட்டிக் காட்டி இஸ்லாத்தின் உண்மையை ஆய்வு செய்யாமல் உளறிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதே உண்மை.

macca

கடந்த காலங்களி்ல் உலகத்தில் பல்வேறு வகையான போர்கள் நடந்து இருக்கின்றது  நாடு பிடித்தல் என்ற பேரிலும் மதத்தை பரப்புதல் என்ற பேரிலும் உலகத்தில் கோடன கோடி மக்கள் உயிர் நீத்து இருக்கின்றார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது உண்மையில் இஸ்லாம் வாலால் பரப்பப்பட்ட மார்க்கம் என்று சொல்பவர்கள் உலகத்தின் வன்முறை ஆட்சியாளர்களை பற்றி முதலில் ஆராய்ந்து கொள்ள வேண்டும்

உலகத்தின் வன்முறையான ஆட்சியாளர்களின் வரிசையி்ல் முன் வரிசையில் இருப்பவன் என்றால்  அது செங்கிஸ்கானாகத்தான் இருக்க முடியும் இன்றைக்கும் இவனுடைய கல்லறையை தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் எல்லாம்  தேடிக் கொண்டு இருக்கின்றார்கள்களாம் இவனுடைய ஆட்சிக் காலத்தில் ஒரே நாளில் மாத்திரம் சமர்க்கன் என்ற நகரத்தில் ஐம்பதாயிரம் மக்களை கொன்று குவித்து வீர சாகசம் புரிந்தவனாம் இவன்  அது மட்டுமன்றி அன்றைய கால ஆப்கானிஸ்த்தானின் கவர்ணரை நடு வீதியி்ல் கொண்டு வந்து வெல்லியை காய்ச்சி எடுத்து அவருடைய தொன்டையிலும் காதுகளிலும் கண்களிலும் சூடு போட்டு மகிழ்ச்சி கண்ட மா பெரும் கொடுமைக் காரானாம் நெப்போலியனின் அகராதியில் முடியாது என்ற வார்த்தை எவ்வாறு இல்லையோ அது போன்று இந்த  செங்கிஸ்கானுடைய அகராதியில் இறக்கம் என்ற வார்த்தைக்கே இடமில்லையாம் 

டெர்மஸ் நகரில் ஒரு நாள் அவன் முகாமிட்டு இருந்தானாம் அங்குள்ள பெண்களின் கற்புக்ளை சூறையாட அப்போது அங்கிருந்த ஒரு மூதாட்டி என் நாட்டு பெண்களையேல்லாம் விட்டு விடு என் வயிற்றி்ல் உள்ள பெறுமதியான  வைரக் கற்களையேல்லாம் தருகிறேன் என்றாலாம் வயிற்றி்ல் பெறுமதியான  வைரக் கல்லா என்று சொல்லி அந்த மூதாட்டின் வைற்றை கிழித்தானாம் அதில்  வைரக் கற்கள் இருப்பதை கண்டு அதிர்ந்து போனானாம் பிறகு அவனுடைய சிப்பாய்களுக்கு கட்டளையி்ட்டானாம் அனைத்து பெண்களுடைய வயி றுகளையும் வெட்டுங்கள் ஏதோ வைரக் கற்கள் இருப்பதாக கூறி இவ்வாறு ஒரே நாளில் அந்த டெர்மஸ் என்ற நகரத்தில் உள்ள அனைத்து பெண்களையும் கொன்று குவித்து சாகசம் புரிந்தானாம் இவனுடைய 65 கால ஆட்சிக் காலத்தில் மாத்திரம் இரண்டு கோடிக்கு மேலானா உயிர்களை வேட்டையாடியுள்ளானாம் இந்த மாமிச தீவிரவாதி செங்கிஸ்கான் ஆனால் எந்த வொரு ஊடகமும் எந்த வொரு எழுத்தாளனும் இவனை ஒரு தீவிரவாதியாகவோ பயங்கரவாதியாகவோ அல்லது மதத்தை சம்பத்த படுத்தியோ பேசுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது

உலகத்தில் பல்வேறு வகையான  போர்கள் நடைபெற்று இருக்கின்றன அதில் பலியான மக்கள்  பிரான்ஸின் ஜனநாயக புரட்சியில் 66 இலட்சம் மக்கள் பலியிகியுள்ளார்களாம்  ரஷ்யாவின் சோஷலிச புரட்சியில்  ஒரு கோடி மக்களும் ஐரோப்பிய மத புரோகிதர்களின் உள் நாட்டு போரில் மாத்திரம் ஒரு கோடி இருபத்தைந்து இலட்சம் மக்களும் இந்தியாவின் இகிதாசம் பேசுகிறது மதத்தை பரப்புவதற்காக மாத்திரம் இந்தியாவில் நடத்தப் பட்ட போர்களில் ஒரு கோடி மக்களும்  பலியாகியுள்ளார்களாம் அது மட்டுமன்றி முதலாம் உலகப் போர் இரண்டாம் உலகப் போரில் ஐந்தர கோடி மக்கள் பலியாகியுள்ளார்களாம் ஈரான் ஈராக் போரில் பத்து இலட்சம் மக்களும் வியட்னாம் போரில் இருபது இலட்சம் மக்களும் கொரில்லா போரில் முப்பது இலட்சம் மக்களும் 1989 முதல் 1990 களில் உலகத்தில் நடை பெற்ற உள் நாட்டு  போர்களில் ஒன்பது கோடி மக்களும் பலியாகியுள்ளார்களாம் என்று ஆய்வு சொல்கிறது

இவ்வாறு உலகத்தில் மதத்தை பரப்புவதற்காக  தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக நாட்டை பிடிப்பதற்காக வெல்லாம் நடை பெற்ற போர்களில் மொத்தமாக பலியாகியவர்களின் எண்ணிக்கை 18 கோடியே 86 இலட்சமாகும் ஆனால் 2000ம் ஆண்டு முதல்2015 ம் ஆண்டு வரை மியன்மார் பலஸ்தீன் ஆப்கானிஸ்தான் இந்தியா இலங்கை ஈராக் சிரியா போன்ற நாடுகளில் நடந்த போர்களிலும்  கோடான கோடி மக்கள் பலியாகியுள்ளார்கள் ஆனால் அதன் எண்ணிக்கை சரிவர தெறியாததன் காரணமாக குறிப்பிட்டு சொல்ல முடிய வில்லை ஆனால் இந்த போர்களுக்கு தலைமை தாங்கிய மதத் தலைவர்களையோ நாட்டையே எந்தவொரு பத்திரிகையும் எந்தவொரு எழுத்தாளனும் தீவிர வாதி என்று சொல்வில்லை என்பதே வேடிக்கையான விடயாமாகும்

மேற் குறிப்பிட்டவை எதற்கா வென்றால் உலகத்தில் இஸ்லாம் வாலால் பரப்பபட்டதாக கூறும் சகோதர சகோதரிகள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த போர்களையும் உலகத்தில்  அதன் பிற்பாடு நடந்த போர்களையும பிரித்து உண்மையை வெளிக்காட்டவே குறிப்பிட்டுள்ளேன்  நபி (ஸல்) அவர்கள் சுமார் இருபத்தி மூன்று வருட காலம் நபியாக வாழ்ந்து உள்ளார்கள் அதில் ஒன்பது வருட காலமே இஸ்லாமிய ஆட்சியாளராக இருந்துள்ளார்கள் ஆனால் அவருடைய பதி மூன்று வருட கால வாழ்க்கை எடுத்துக் கொண்டால் அதில் தெட்டத் தெளிவாக அறிந்து கொள்ளலாம் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா…? அல்லது தியாகத்தால் வளர்ந்த மார்க்கமா என்று…?

உண்மையில் நபி (ஸல்) அவர்களின் வா்க்கையை நன்றாக ஆராய்வு செய்வீர்களாகவிருந்தால்  பதி மூன்று வருட வாழ்க்கையில் அவர்கள் எந்த வீத போரும் புரிய வில்லை என்பதை தெட்ட தெளிவாக அறியலாம் குறிப்பாக மக்காவில் அந்த காலத்தில் ஆட்சியுமிருக்கவில்லை ஆனால் இந்த மார்க்கத்தை சொன்ன ஒரே காரணத்திக்கா மக்கள் நபி (ஸல்) அவர்களின் மீது வைத்திருந்த அல் அமீன் அஸ்ஸாதீக் போன்ற நற் பெயர்களையெல்லாம்  இல்லதொலித்தார்கள் அவர்களை சொல்லனா துன்பத்துக்கு ஆளாக்கினார்கள் சமூக பகிஷ்காரம் செய்தார்கள் இவ்வாறு பல் வேறு வகையான சோதனைகளையும்  தாங்கித்தான் எங்கள் உயிருக்கு மேலான நபி (ஸல்) அவர்களும் அவர்களை பின்பற்றிய சஹாபாக்களும் இந்த உண்மையான மார்க்கத்தை நிலை நாட்டினார்கள்

ஆனால் அவர்கள் எந்த வீத சோதனைகளை கண்டும் அவர்கள் அஞ்சவில்லை  உமர் (ரலி) ஹம்சா (ரலி) அலி (ரலி) போன்ற வீர சஹாபக்கள் இருந்தும் எதிர்த்தாக்குதல் தாக்க அவர்கள் தயாராகவுமில்லை அவர்கள் சஹாபாக்களுக்கு சொன்னது எல்லாம் பொருமை பொருமை என்றே ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் திருப்த்தியையும் அவனுடைய உதவியையும் அவனுடைய கட்டளையையும் மட்டுமே நம்பி வாழ்ந்தார்கள் 

நபி (ஸல்) அவர்களின் ஒன்பது வருட இஸ்லாமிய ஆட்சியிக்  காலத்தில் நடை பெற்ற போர்களின் மொத்த எண்ணிக்கை 57 ஆகும் அதில் நபி (ஸல்) அவர்கள் தலைமை தாங்கிய போர்கள் 19 சஹாபாக்கள் தலைமை தாங்கிய போர்கள் 38 ஆகும் இதில் கொள்ளப்பட்ட மக்கள் ஆகக் கூடுதலாக 1070 காயப்பட்டவர்களின் எண்ணிக்கை 250 போர்க் கைதிகளாக பிடிபட்டவர்களின் எண்ணிக்கை 520 ஆகும் இந்த உலகத்தி்ல் இது வரைக்கும் நாடு பிடித்தல் மத்ததை பரப்புதல் என்ற பேரில் நடைபெற்ற போர்களில் பலியான  எண்ணிக்கையும் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நடை பெற்ற போர்களி்ல் நடை பெற்ற போர்களில் இறந்த மக்களின் எண்ணிக்கையும் சரியாக புரிந்திருந்தால் இஸ்லாம் வாளால் பரப்பபட்ட மார்க்கமா அல்லது தியாகத்தால் வளர்ந்த  மார்க்கமா என்று புரிந்திருக்கலாம்.

madina

இஸ்லாம் வாளால் பரப்பபட்ட மார்க்கம் என்று கூறும் அன்பான மாற்று மத சகோதர சகோதரிகளே நீங்கள் நன்றாக அல் குர் ஆனையும் ஹதீசையும் ஆராயுங்கள் அதன் பிற்பாடு கூறுங்கள் இஸ்லாம் வாளால் பரப்பபட்டதா என்று…?
சில அடிவருடி பெயர் தாங்கிய முஸ்லிம்கள் செய்யும் தவறுகளைப் பார்த்து இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்று கூறாதீர்கள் இஸ்லாம் அது இம்மைக்கும் மறுமைக்குமான உண்மையான மார்க்கமாகும் அந்த மார்க்கம் பிலால் அம்மார் ஹப்பாப் சுமைய்யா (ரலி) அவர்கள் போன்வர்களின் இரத்தத்தின் தியாகத்தால் வளர்ந்த மார்கமேயாகும் என்பதை இஸ்லாத்தை ஆராய்வு செய்தால் நீங்களும் அறிந்து கொள்வீர்ள் இன்ஷா அல்லாஹ்