ஐ தே கட்சி முஸ்லிம் காங்கிரசுடன் நடந்துகொண்டதனைப் போன்று முஸ்லிம் காங்கிரஸ் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியுடன் நடந்துகொள்ளுமா?

 

அஹமட் இர்ஷாட் 

எமது  நாட்டின் அரசியல் வரலாற்றினை எடுத்துக் கொண்டால் பல கட்சி அரசியல் சூழலையே அவதானித்து வருக்கின்றோம். பல அரசியல் கட்சிகள் அரசியலில் ஈடுபாடு கொண்டுள்ள காரணத்தினால் ஆட்சியமைப்பு விடயத்தில் தனிக்கட்சி ஆட்சி என்பதற்கு மேலாக கூட்டணி ஆட்சிக்கான சந்தர்ப்பங்களே அதிகமாக காணப்பட்டு வருக்கின்றது.

 

1978ம் ஆண்டின் விகிதாசார தேர்தல் முறைமையும் பல்வேறு கட்சிகளுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்திற்கான வாய்ப்பினையும் உறுதி செய்துள்ளது. இதன் காரணமாக 1989ம் ஆண்டு பொதுத்துத் தேர்தலுக்கு பின்னார் இலங்கையில் எந்தவொரு பொதுத் தேர்தலிலும் கட்சிகள் தனித்து போட்டியிட்டு ஆட்சியமைத்த வரலாறு கிடையாது.

unnamed_Fotor

1994ம் ஆண்டு சிறீலங்கா சுதந்திரக் கட்சி பொது ஜனஐக்கிய முன்னணியாக களமிறங்கி வெற்றி கொண்டது. அதேபோன்று 2000ம் ஆண்டு ஐக்கியதேசியக் கட்சி ஐக்கிய தேசிய முன்னணியாக கூட்டணி அமைத்தே ஆட்சியினை கைப்பற்றியது. இவ்வாறு தேசிய அரசியலிலே கூட்டணி அரசுகளே ஆட்சியமைத்திருப்பதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இதே போன்றுதான் பிராந்திய அரசியலிலும் கூட்டணி அரசுகளே ஆட்சியினை கைப்பற்றியுள்ளன.

 

நல்லாசிக்கான தேசிய முன்னணியானது வளர்ந்து வருக்கின்ற ஒரு அரசியல் கட்சி என்ற வகையில் தனித்து ஒர் தேர்தலை சந்திப்பது என்பது நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் இயலாமையான விடயமாக காணப்பட்டமையினாலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசானது தான் வழமையாக பெற்றெடுக்கும் ஆசனத்தினை இம்முறை வென்றெடுக்க முடியுமா என்ற கேள்வி சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமைக்கு பாரிய சவாலாக இருந்த நேரத்திலேயே நல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது சமரச அரசியல் எனும் உடன்படிக்கையின் வாயிலாக அகில இலங்கை ரீதியில் வன்னியிலும் மட்டக்களப்பிலும் மட்டுமே மரச்சின்னத்தில் போட்டியிட்ட சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் கூட்டிணைந்து போட்டியிட்டது. அந்த வகையில் மட்டக்களப்பிலே நல்லாட்சிகான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் மரச்சின்னத்தில் போட்டியிட்டார்.

 

அதனால்தான் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசானது பாராளுமன்றத்தில் ஒரே ஒரு மரசின்னத்தில் வென்றெடுக்கப்பட்ட ஆசனமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட அலிசாஹிர் மெளலானாவை தக்கவைத்திருக்கின்றது. அது மட்டுமல்லாமல் மட்டக்களப்பில் வென்றெடுக்கப்பட்ட  அலிசாஹிர் மெளலானாவின் ஆசனம் மட்டுமே தேசிய அரசாங்கத்தில் கூட்டிணைந்த அரசியல் கட்சியாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினை வெளிச்சம் போட்ட்டுகாட்டுக்கின்றது என பகிரங்கமாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் கூறியுருந்தார்.

 

எனவே மட்டக்களப்பில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வென்றெடுத்த ஆசனத்தின் பெறுமதியினை பாராளுமன்றத்தில் மட்டுமல்லாமல் முழு உலகிற்குமே எடுத்துக்காட்டியது அனுரகுமார திசாநாயக்கவின் உரை.

 

இந்த தனித்துவாமான ஆசனத்தினை வென்றெடுப்பதற்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு பெற்றுக் கொடுத்த 12000க்கும் அதிகமான வாக்குகளே அடிப்படை காரணம் என்பது பள்ளிக்கூடங்களில் சாதரணதரத்திக்கு கீழ் அரசியல்படிக்கும் மாணவர்களிடம் வினவினால் அதில்மாற்றுக்கருத்துக்களை வெளியிடமாட்டார்கள் என்பது எனது கருத்தாக இங்கு பதிவேற்றம் செய்ய விரும்புக்கின்றேன்.

 

தனித்துவங்கள், கொள்கைகள், நிலைப்பாடுகளில் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாமல் தேர்தல் கூட்டணியொன்றினை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி ஆகியவற்றோடு அமைத்துக்கொள்ளுதல் என்ற தீர்மானத்தினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை கடந்த பொதுத் தேர்தலில் மேற்கொண்டிருந்த பொழுதும்  அதில் பல்வேறு உடன்பாடான, முரண்பாடான விமர்சனங்கள் இருந்திருக்க முடியும்.

 

அவை ஆரோக்கியமானவையே. ஆனால் முன்னர் குறிப்பிட்டதைப் போன்று பல கட்சி அரசியல் சூழல் ஒன்றில் இத்தகைய உடன்பாடுகளை கொண்ட கூட்டணிகளை அரசியல் களத்திலிருந்து எவராலும் ஒதுக்கிவிட முடியாது. இதற்கான முன்மாதிரிகளை இஸ்லாமிய வரலாற்றிலும் நிறையவே காணக்கூடியதாக இருக்கின்றது. நபிகளாரின் வழிமுறைகளில் வாக்குமீறாத சானக்கியமான அரசியல் நகர்வுகள் சம்பந்தமான வரலாற்றினை படிக்கின்ற பொழுது எம்மால் இதனை தெளிவாக கண்டுகொள்ள முடியும். 

 

செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையினை இன்னொரு கோணத்தில் பார்க்கின்ற பொழுது முஸ்லிம் காங்கிரஸ் மீதான விமர்சனங்களை புறம்தள்ளிவிட்டு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது தங்களது மாற்றுக்கருத்துக்களை ஓராமாக்கிவிட்டு மேற்கொள்ளப்பட்ட உடன்பாடாக கருதாமலும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது முஸ்லிம் காங்கிரசினை விமர்சித்தமையானது அவர்களை அழிக்க வேண்டும் அல்லது அவர்களை அரசியல் களத்திலிருந்து புறம்தள்ள வேண்டும் என்ற கோணத்தில் பார்ப்பதினை முற்றாக தவிர்த்து அவர்களிடத்தில் நல்ல மற்றங்கள் ஏற்பட வேண்டும் என்ற நல்ல நோக்கிலேயே முன்வைக்கப்பட்ட விமர்சனங்களாகும் என தேர்தல் பிரச்சார மேடைகளில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பரவலாக கூறி வந்தது.

 

எனவே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடனான நல்லாட்சிக்கான தேசிய முன்னணி செய்து கொண்ட உடன்படிக்கை குறித்து மக்கள் மிகவும் தெளிவான புரிதலுடன் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமை அடுத்த கட்டமாக எதனை செய்ய திட்டம் தீட்டுக்கின்றது என அவதானித்தவர்களாக இருக்கின்றனர்.

 

அந்த வகையிலே நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசும் கடந்த பொதுத் தேர்தலில் செய்து கொண்ட சமரச அடிப்படையிலான  ஒப்பந்தத்தின் ஒன்பதாவது சரத்தானது ‘பொதுத் தேர்தலை தொடர்ந்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை உத்தரவாதப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும் பட்சத்தில் சிறிலங்க முஸ்லிம் காங்கிரசானது பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

 

அதற்கேற்ற வகையில் நல்லட்சிக்கான தேசிய முன்னணியினால் பிரேரிக்கப்படும் ஒருவர் சமர்பிக்கப்படும் தேசியப் பட்டியலில் உள்வாங்கப்படுவார்’ எனத்திட்டவட்டமாக இரு கட்சிகளும் செய்து கொண்ட ஒப்பந்தங்களில் இரு கட்சிகளினதும் செயலாளர்கள் பகிரங்கமாக ஒப்பமிட்டிருந்தனர். அத்தோடு செய்து கொள்ளப்பட்ட உடன் படிக்கையானது முற்று முழுதாக சமூக நலன் சார்ந்த உடன்படிக்கையாகவே இருந்தது. அதுமட்டுமல்லாமல் நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டும் முஸ்லிம்களின் எதிர்காலம், பிரதி நிதித்துவம் என்பன முதன்மைப்படுத்தப்பட்டும் இருந்தது.

 

1994 ஆம் ஆண்டின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றமைக்கான பாரிய பங்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கே உண்டு. இதனை எவரும் மறுதலிக்க முடியாது. காத்தான்குடி பிரதேசத்தில் அளிக்கப்பட்ட சுமார் 28000 முஸ்லிம் வாக்குகளில் முஸ்லிம் காங்கிரஸுக்கு15000 வாக்குகள் கிடைத்திருந்தாலும் இவற்றில் சுமார் 12000 வாக்குகள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் பெற்றுக்கொடுக்கப்பட்டவையாகும்.

 

அதேவேளை, காத்தான்குடி பிரதேசத்தில் நீண்ட கால அரசியல் செல்வாக்கை கொண்டிருந்த எம்.எல்.ஏ.எம்ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடி பிரதேசத்தில் பெற்றுக்கொண்ட வாக்குகள் சுமார் 13000 ஆகும். எனவே,  இந்தவாக்குகளை சரியான ஒப்பீட்டுடன் நோக்கும் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் உறுப்பினர் ஒருவர் 21 வருடங்களுக்குப் பின்னர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாவதனை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியே உறுதி செய்துள்ளது.

 

இவ்விடயத்தினை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையானது மட்டகளப்பு மாவட்ட வாக்களர்களின் உள்ளங்களை எதிர்காலத்தில் வென்றெடுக்கும் படியாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலும், ஹிஸ்புல்லா1989ம் ஆண்டு வாக்கு மாறிவிட்டார் என பகிரங்காமாக தேர்தல் மேடைகளில் விளக்கமளிக்கும் முஸ்லிம்காங்கிரசும் அதன் தலைமையும் அதனை உதாரணமாக வைத்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு பாராளுமன்ற தேசியபட்டியலினை வழங்குவதன் மூலம் காத்தான்குடி மக்களின் உள்ளங்களில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையானது வாக்குறுதி மீறாத இஸ்லாமிய சமூகத்தினை பிரதிபலிக்கும் கட்சியின் தலைமை எனும் நாமத்தினை முத்திரை குத்திக்கொள்வார்கள் என்பது புலப்படும்உண்மையாக இருக்கின்றது.

 

அத்தோடு கடந்த மாகானசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியுடன் செய்து கொண்ட சமரச அரசியலின் அடிப்படையில் வடமாகாணத்திலே நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தினை மாகாண சபையில் வழங்கிய கூட்டமைப்பின் முன்மாதிரியினை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தமைமையும் பின்பற்றுமா என்பது பலருடைய எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது.

 

2004ம் ஆண்டு ஐக்கியதேசியக் கட்சிக்கு 10 தேசியப்பட்டியல் ஆசனங்கள் மாத்திரம்  கிடைத்தும் தங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட கட்சி என்ற வகையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையானது நான்கு தேசியப்பட்டியல் ஆசனங்களை வழங்கி தங்களை ஒரு தேசிய அரசாங்கத்தினை உறுவாக்குகின்ற வல்லமையுடைய வாக்குமீறாத கட்சி என்பதனை ஐக்கிய தேசியக் கட்சி பறைசாற்றியிருந்தது.

 

அத்தோடு விட்டு விடாமல் தொடர்ந் தேர்ச்சியாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் தாங்கள் மேற்கொள்ளும் அனைத்து உடண்படிக்கைகளுக்கும் அமைவாக ஐக்கிய தேசியக் கட்சியானது சிறுபான்மை சமூகத்திற்கு எடுத்துக்காடான பெரும்பான்மை கட்சியாக இருந்து வருக்கின்றது என்பது வரலாறாக இருக்கின்றது.

 

அந்த வகையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிஸ் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியுடன் செய்து கொள்ளப்பட்ட உடண்படிக்கைக்கு அமைவாக மட்டக்களப்பில் தங்களது பாராளுமன்ற வெற்றிக்கு வித்திட்ட நல்லாட்சிக்கான முன்னணிக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட வேண்டும் என்பது முக்கிய அரசியல் அவதானிகளின் ஒருமித்த கருத்தாக இருக்கும் அதேநேரத்தில் அப்துர் ரஹ்மானுக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் வாக்களித்த ஒட்டு மொத்த மட்டக்களப்பு வாழ் வாக்களர்களினதும் எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது.