ஏ.எஸ்.எம்.ஜாவித்
ஆசிரியர் திருமதி எப்.நிஹாரா ஆலிப் எழுதிய தரம் மூன்று, தரம் ஐந்து ஆண்டு மாணவர்களுக்கான மூன்று நூல்களின் வெளியீட்டு நிகழ்வு கடந்த சனிக்கிழமை(12) கொழும்பு-10 அல் ஹிதாயா மகா வித்தியாலய பஹார்தீன் கேட்போர் கூடத்தில் தொழிலதிபரும் கொடைவள்ளலுமான அல்ஹாஜ் பஹார்தீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக கொழும்பு வலயக் கல்விப் பணிப்பாளர் ஜயந்த விக்கிரம நாயக்கவும் அதிதிகளாக உனவடுன பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.ஏ.எம்.முனாஸ் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.பி.எம்.அலவி ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தனர்.
பாடசாலை அதிபர் திருமதி பி.டி.எம்.ஸாஹிர், கணித ஆசிரியர் ஆலோசகர் அருந்ததி ராஜவிஜயன், மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத், கொழும்பு அல்ஹிக்மா கல்லூரி பிரதி அதிபர் எம்.எம்.மௌவ்சூம் உட்பட ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்விற்கு வருகை தந்த பிரதம அதிதி உட்பட ஏனைய அதிதிகள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு மாணவர்களின் பேண்ட் வாத்திய இசையுடன் பாடசாலை அதிபர்;, ஆசிரியர்களினால் மேடைக்கு அழைத்து வரப்பட்டனர்.
மாணவன் ரஷீட்டின் கிராஅத்துடன் நிகழ்வு ஆரம்பமானது. வரவேற்புரையை நூலசிரியரின் கணவர் ஜனாப் ஆலிபினால் நிகழ்த்தப்பட்து. நூலாய்வுகளை அல் ஹிக்மா கல்லூர் பிரதி அதிபர் எம்.எம்.மௌவ்சூம், உனவடுன பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.ஏ.எம்.முனாஸ், கணித ஆசிரிய ஆலோசகர் அருந்ததி ராஜவிஜயன் ஆகியோர்கள் நிகழ்த்தினார்கள். ஏற்புரையை நூலசிரியர் திருமதி எம்.நிஹாரா ஆலிப் நிகழ்த்தியதுடன் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட கொழும்பு வலயக் கல்விப் பணிப்பாளர் ஜயந்த விக்கிரமநாயக்கவும் உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் நூலின் முதற் பிரதியை நூலாசிரியரிடமிருந்து இலக்கியப் புரவலர் ஹாஷிம் உமர் பெற்றுக் கொண்டதுடன் ஏனைய அதிதிகளும் நூலாசிரியரிடமிருந்து நூல்களை பெற்றுக் கொண்டன