ஜப்பானில் ஏற்பட்டிருக்கும் கடும் வெள்ளத்தின் காரணமாக 90 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்பு !

ஜப்பானில் ஏற்பட்டிருக்கும் கடும் வெள்ளத்தின் காரணமாக 90 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வெள்ளத்தின் காரணமாக, வீடுகளின் மேல் நின்றவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.

ஜப்பானின் கிழக்குப் பகுதியில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக, மேலும் ஆயிரக்கணக்கானவர்களை தங்களது வீடுகளை விட்டு வெளியேறும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஃபுகுஷிமா உட்பட ஜப்பானின் கிழக்கு, வட கிழக்குப் பகுதிகளின் பெரும்பாலானவற்றில் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த மாதம் ஜப்பானின் தென்கோடியில் இருக்கும் கையுஷு தீவை கோணி புயல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 70 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.