நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்தில் கொண்டாடப்பட்ட சர்வதேச எழுத்தறிவு தினம்!

 
ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் 

 

சர்வதேச எழுத்தறிவு தினம் இன்று நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்திலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

வித்தியாலய அதிபர் ஏ.எம்.முகம்மட் பாறூக் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகள் ‘ சகல மாணவர்களும் எழுத்துக்களை எழுதுவதற்கும், வாசித்து விளங்கிக் கொள்வதற்கும் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் நாம் உதவி செய்வோம்’ எனும் தொணிப் பொருளில் இடம் பெற்றன.

‘எழுத்தறிவும், உறுதிமிக்க சமூதாயமும்’ எனும் குறிக்கோளை எய்தும் பொருட்டு கல்லூரியின் சிரேஷ்ட ஆசிரியர் எம்.எம்.நியாஸ் உரைகளை நிகழ்த்தினார்.

இறுதியில் மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரியளவிலான விழிப்புணர்வு ஊர்வலமொன்றும் இடம்பெற்றது.

பாடசாலை வளாகத்திலிருந்து ஆரம்பமான இவ்வூர்வலம் பிரதேச செயலக வீதியினூடாக கல்முனை-அக்கரைப்பற்று பிரதான வீதியைக் குறுக்கறுத்து வடகடல் சாலை வீதியினூடாக சுமார் 1.5கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்து, மீராநகர் வழியே பாடசாலையை வந்தடைந்தது.

இவ்வூர்வலத்தில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.

Im-01_Fotor_Collage