நிலநடுக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ள நேபாளம் மக்களின் கண்ணீரை துடைக்க இந்தியா முயற்சி செய்யும் என்று பிரதமர் மோடி!

mann-ki-baat-350_042615093833

 நிலநடுக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ள நேபாளம் மக்களின் கண்ணீரை துடைக்க இந்தியா முயற்சி செய்யும் என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ என்ற பெயரில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். பிரதமர் மோடி இன்று உரையாற்றுகையில், நிலநடுக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ள நேபாளம் மக்களின் கண்ணீரை துடைக்க இந்தியா முயற்சி செய்யும் என்று கூறினார். இமயமலையில் அமைந்த நாடான நேபாளத்தை நேற்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் தாக்கியது. நேபாள நாட்டில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்தியாவின் வடமாநிலங்கள் சிலவும் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. 

நேபாளத்தில் நில நடுக்கத்தின் பிடியில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 1,900 ஐ தாண்டியது. இந்தியாவில் நிலநடுக்கத்தில் 53 பேர் உயிரிழிந்தனர். நேபாளம் மற்றும் இந்தியாவில் பாதிக்கப்பட்ட இடங்களில் இந்தியா முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளது. ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி பிரதமர் மோடி, “என்னுடைய நேபாள சகோதர, சகோதரிகளே, இந்த துயரமான நேரத்தில் இந்தியா உங்களுடன் உள்ளது. நேபாளத்தின் வலியானது, 125 கோடி இந்தியர்களுடையது. நேபாளத்தின் ஒவ்வொருடைய கண்ணீரை துடைக்க இந்தியா, அதனால் முடிந்தவரையில் சிறப்பாக செய்யும், நேபாளம் மக்களுடன் கைகோர்த்து அவர்களுடன் நிற்போம்,” என்று கூறினார்.

‘மன் கி பாத்’  நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டது போன்று நான் உணரவில்லை, நான் வேதனையையே உணர்கிறேன்… தேசிய பேரழிவுகள் தொடங்கி இருப்பது போன்று இது தோன்றுகிறது என்று கூறினார்.  “கடந்த மாதம் நான் பேசியபோது பனிமழை மற்றும் பருவம் தவறியமழை இடம்பெற்று இருந்தது, விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பீகாரில் சூறாவளி காற்று வீசி பலமக்களை உயிரிழக்க செய்தது. பெரும் பொருட்சேதம் ஏற்பட்டது. இந்த சனிக்கிழமை நிலநடுக்கத்தினால் பேரழிவு ஏற்பட்டு உள்ளது, இது உலக முழுவதையும் உலுக்கி உள்ளது. என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
நேபாளத்தில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டுஉள்ள மக்களை மீட்கவே நாம் முன்னுரிமை அளிப்போம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.