வியப்பூட்டும் அதி நவீன ஆப்பிள் டிவி !

ஆப்பிள் வாட்ச், ஐபேட் ப்ரோ என்று அடுத்தடுத்து பல அதிரடி அறிவிப்புகளால் சான் பிரான்சிஸ்கோவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள ஐபோன் வாடிக்கையாளர்களை அசர வைத்த அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக், அடுத்தபடியாக நிகழ்வில், ஆப்பிள் டிவி-யை பற்றி பேசத் தொடங்கினார்.

Apple-TV

டிவியின் எதிர்காலம் அப்ளிகேஷன்கள்தான் (ஆப்ஸ்) என்று குறிப்பிட்ட குக், 60 சதவீதத்திற்கும் மேலான பணம் செலுத்தி தொலைக்காட்சி பார்க்கும் சேவைகள் (Paid Tv Services) ஆப்பிள் கருவிகளில் நடைபெறுவதாக சொன்ன குக், ஆப்பிள் டிவியில் கிடைக்கவிருக்கும் அனுபவம் குறித்து அவர் திரையிட்ட வீடியோ பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுத்தது.

 

குரல் மூலமாகவே இதற்கு கட்டளைகள் கொடுக்க முடியும். மேலும் இந்த புதிய டிவியின் ரிமோட்களில் முதல் முறையாக டச் ஸ்க்ரீன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. டிவி பார்க்கும் அனுபவத்தையும், டி.வி கேமிங் தொழில்நுட்பத்தையும் ஆப்பிள் டிவி அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.