அரசியல் சாசனப் பேரவைக்கான பிரதிநிதிகள் பரிந்துரைகளில் திருப்தியில்லை என முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை அமைச்சர்கள் அரசியல் சாசனப் பேரவையின் பிரதிநிதிகளாக பெயரிடப்பட்டுள்ளமை நல்லாட்சி கொள்கைகளுக்கு புறம்பானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பாராளுமன்றின் போது அரசியல் சாசனப் பேரவையின் பிரதிநிதிகள் நியமனம் குறித்து இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை அமைச்சர்களை பெயரிடுவதில்லை என இணக்கம் காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும்இ பிரதமரும்இ ஜனாதிபதியும் அரசியல் சாசனப் பேரவைக்கான தமது பிரதிநிதிகளாக அமைச்சரவை அமைச்சர்களை நியமித்துள்ளதாக் குற்றம் சுமத்தியுள்ளார்.
அமைச்சர்களை பிரதிநிதிகளாக நியமிக்கும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு பிரதமரிடம் தாம் கோருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.