ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு போதியளவு ஆதரவு கிடைக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஜெனீவாவில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு ஆதரவு கிடைக்கும் என நம்;புவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் மீது சர்வதேச சமூகம் நம்பிக்கைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் தாமும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் ஜெனீவா பயணம் செய்ய உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவாவில் தங்கியிருக்கும் காலத்தில்இ யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான உள்ளக விசாரணைப் பொறிமுறைமைக்கு ஆதரவு திரட்டும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.