அபு அலா –
உள்ளூராட்சி வாரத்தையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்கும் திணைக்களங்களுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் அரச அதிகாரிகள் ஆகிய குழுவினர்
இன்று புதன் கிழமை(09) செங்கலடி பிரதேச சபை, ஓட்டமாவடி பிரதேச சபை போன்ற பிரதேச சபைகளுக்கு விஜயத்தை மேற்கொண்டு அங்கு நடைபெறும் சேவைகளை நேரில் பார்வையிட்டதாக முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் எஸ்.எல்.முனாஸ் சற்று முன்னர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சரின் தலைமையில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம், மாகாண சபை உறுப்பினர்களான பிரசன்ன, கருணாகரன், நடராசா, துரை ரட்ணம், மற்றும் முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.சலீம் முதலமைச்சின் காரியாலய அதிகாரிகள் ஆகியோரும் இந்த விஜயத்தை கொண்டனர்.
விஜயத்தின்போது அங்கு இடம்பெறும் அரச காரியாலங்களின் வேலைத்திட்டங்களின் குறைபாடுகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டனர்.
நாளையும், நாளை மறுதினமும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபைகள், கல்வித் திணைக்களம்,போக்குவரத்து அதிகார சபை, கிராமிய அபிவிருத்தி சபை, கைத்தொழில் திணைக்களம், சுகாதார திணைக்களம், கட்டடத் திணைக்களம் போன்றவற்றுக்கு இக்குழுவினர் விஜயம் செய்து பார்வையிடவுள்ளர் என முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் இன்று ஊடகத்துக்கு கருத்து தெரிவித்தார்.