மாவட்டத்தில் வெற்றிபெற்ற சோபர் இளைஞர் கழகம் தேசிய ரீதிக்கு தகுதி!

அபு அலா 

அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான மாவட்ட இளைஞர் கழகங்களுக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் அட்டாளைச்சேனை சோபர் இளைஞர் கழகம் சம்பியன் பட்டத்தை தனதாக்கியதுடன் தேசிய ரீதியில் விளையாட தகுதியும் பெற்றுள்ளது.

அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களுக்குள் 9 பிரதேச செயலக இளைஞர் கழக அணியினர் பங்கேற்று நடைபெற்ற இச்சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டிக்கு அட்டாளைச்சேனை சோபர் இளைஞர் கழக அணியினரும், மருதமுனை இளைஞர் அணியினரும் தெரிவு செய்யப்பட்டது.

image2_Fotor

இந்த இறுதிச் சுற்றுப்போட்டி நேற்று செவ்வாய்கிழமை (08) மாலை நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை சோபர் இளைஞர் அணியினர் மருதமுனை இளைஞர் அணியினரை எதிர்கொண்டு 2 : 0 என்ற கோள் வித்தியாசத்தில் அட்டாளைச்சேனை சோபர் இளைஞர் அணியினர் வெற்றிபெற்றது.

அட்டாளைச்சேனை சோபர் இளைஞர் அணியின் சார்பில் கே.எம்.அக்ரம் மற்றும் எம்.யாசீர் ஆகியோர் தலா ஒரு கோள்களை போட்டு அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

இந்த மாவட்ட உதைபந்தாட்டப் போட்டியில் வெற்றிபெற்ற அட்டாளைச்சேனை சோபர் இளைஞர் அணியினர் தேசிய ரீதியில் விளையாட தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த விளையாட்டுப் போட்டிக்கு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி யூ.எம்.மஜீட், பிரதேச செயலக இளைஞர் கழக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.