ஜவ்பர்கான்
மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் மனித பாவனைக்கு உதவாத உணவுப்பொருட்கள் மற்றும் பழவகைகளை விற்பனை செய்த ஐந்து வர்த்ததகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பெருமளவிலான பாவனைக்குதவாத உணவுப்பொருட்கள் மற்றும் மனித பாவனைக்கு தீங்கு விளைவிக்கும் உணவு பரிமாறும் பாத்திரங்களையும் கொதுச்சுகாதார பகுதியினர் கைப்பறிறியுள்ளனர்.
மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மாணிக்கம் உதயகுமாரின் பணிப்புரையின்கீழ் இன்று காலை மட்டக்களப்பு நகரிலுள்ள பிரபல ஹோட்டல்களஇ; உணவு விடுதிகள்இ பழக்கடைகளஇ; சிற்றுண்டி சாலைகள் என்பன திடீர் சுற்றிவளைப்பு மூலம் பரிசோதிக்கப்பட்டன.
10 வர்த்தக நிலையங்களில் நடாத்திய சோதனை நடவடிக்கைககளின் போது பழுதடைந்தஇ அழுகியஇ பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த 6 நிலையங்கள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டதுடன் பெருமளவு பாவனைக்குதவாத சமையல் பாத்திரங்களும் கைப்பற்றக்ட்டன.
சுமார் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பாவனைக்குதவாத உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு நீதி மன்ற உத்தரவின்பேரில் அழிக்கப்பட்டதாக மாநகர சபை பிரதான பொது சுகாதார பரிசோதகர் நேசதுரை .தேவநேசன் தெரிவித்தார்.