உலகிலேயே நான்தான் அதிகவேகமாக ஓடக்கூடியவர் என்பதை மீண்டும் சீனாவில் நடைபெற்ற உலகச் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியின் 100 மீட்டர் ஓட்டத்தில் வெற்றி பெற்று நிரூபித்தார் உசைன் போல்ட்.
அத்துடன் 200 மீ்ட்டர் மற்றும் 4 x 100 தொடர் ஓட்டத்திலும் தங்க பதக்கம் வென்றார்.
இந்த போட்டிக்கு முன் காயம் காரணமாக சிகிச்சை மேற்கொண்டார் உசைன் போல்ட். இதனால் அவர் மீண்டும் ஜொலிப்பாரா என்ற கேள்வி எழும்பியது. ஆனால், திறமையாக செயல்பட்டு வெற்றி வாகை சூடினார்.
இந்நிலையில் இந்த ஆண்டு இதற்குமேல் ஓடமாட்டேன் என்று உசைன் போல்ட் கூறியுள்ளார். இதுகுறித்து உசைன் போல்ட் தனது பேஸ்புக் பக்கத்தில் ‘‘சமீபத்தில் மகிழ்ச்சியளித்த சீனாவில் நடைபெற்ற உலகச் சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு இந்த வருடம் எந்த போட்டியிலும் கலந்து கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.