எதிர் கட்சி தலைவர் பதவி கிடைத்தமைக்கு நன்றி!

அசாஹீம் 

இலங்கையின் எட்டாவது பாராளுமன்றத்தில் சிறுபான்மை ஒருவர் எதிர் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நல்லாட்சிக்கு நல்லதொரு உதாரணம் என்று மட்டக்களப்பு – சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய நிருவாக சபையின் வண்ணக்கர் இளையதம்பி சீதாராமன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

 

இந்த எதிர்க் கட்சிப் பதவியானது இலங்க பாராளுமன்ற வராற்றில் இரண்டாவது தடவையாக மீண்டும் ஒரு தமிழருக்கு கிடைத்திருப்பது என்பது இந்த நாட்டில் ஜனநாயாகம் மீண்டும் நிலைத்திருக்கின்றது என்பதற்கு ஒரு நல்ல சான்றாகும் இப்பதவி கிடைத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் ஐயாவுக்கு இச்சந்தர்ப்பத்தில் எங்களது ஆலயத்தின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 

1978ம் ஆண்டு ஏ.அமிர்தலிங்கம் எதிர்க்கட்சியாக இருந்ததற்குப் பிறகு இந்த நாட்டில் ஏற்பட்ட அரசியல் யாப்பு சீர்திருத்தத்தின் காரணமாக சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் எதிர்கட்சித் தலைவராக வரமுடியாத சந்தர்ப்பம் ஏற்பட்டிருந்தது தற்யோதைய ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையிலான இனக்கப்பாட்டுடனான அரசியல் காரணமாக எதிர் கட்சிகளில் கூடுதலான ஆசனங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுள்ளதால் மீண்டும் இலங்கை வரலாற்றில் இரண்டாவது தடவையாக ஒரு தமிழ் மகனுக்கு எதிர் கட்சி தலைவராக இருக்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

 

தற்போது எதிர்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் ஐயாவின் தலைமையில் தமிழர்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று பிராத்திப்பதாக அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.