மயிரிழையில் உயிர் தப்பிய தோட்ட தொழிலாளர்கள்!

 

அபு அலா-

 

மலையகத்தில் தற்போது நாளந்தம் மழைவீழ்ச்சி அதிகரித்து வருகின்றது. இதனால் குறிப்பிட்ட சில இடங்களில் வெள்ளபெருக்கும், இடி, மின்னல் தாக்கங்களும் ஏற்பட்டுவருகின்றன. இவ்வாறான நிலையில் புஸ்ஸல்லாவமெல்போட் தோட்டத்தில் நேற்று (2015.09.05) பெய்த கடும் மழை காரணமாக தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த தேயிலை மலை பிரதேசத்தில் மரம் ஒன்றில் மின்னலுடன் இடி விழுந்ததில் மரம் முற்றாக பிளந்து பாதிப்புக்கு உள்ளானது.

01 (15)_Fotor

இதன்போது அருகில் தேயிலை கொழுந்து பரித்துக் கொண்டிருந்த பெண்கள் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை. இந் நிலை தொடர்பாக வானிலை அவதான நிலையத்துடன் தொடர்பு கொண்டபோது தற்போது நாட்டில் குறிப்பாக மலையகத்தில் மழைவீழ்ச்சி அதிரிக்க வாய்புக்கள் உள்ளதோடு இதன் போது இடி, மின்னல், தெடர்ந்து மழை பெய்யும் எனவும் இதனால் வெள்ளபெருக்கு ஏற்பட அதிக வாய்ப்புஉண்டு.

ஆகவே இதனால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டும். குறிப்பாக இடி, மின்னல் ஏற்படும்போது கடைபிக்கவேண்டிய விடயங்களை கடைபிடிக்கவேண்டும் என குறிப்பிட்டனர்.

01 (14)_Fotor

இவ்வாறான நிலையில் மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகங்களினால் இடி, மின்னல் நேரத்தில் தற்காப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கி அவர்களை காப்பாற்றவேண்டியது கட்டாயமானதாகும்.