வாக்­கு­ரி­மை­யினை இழந்­த­வர்கள் அது குறித்து எதிர்­வரும் 25ஆம் திக­திக்கு முன்னர் தேர்தல் திணைக்­க­ளத்­திற்கு அறி­விக்க முடியும் !

 

 

நடை­பெற்று முடிந்­துள்ள ஜனா­தி­பதி தேர்தல் மற்றும் பாரா­ளு­மன்றத் தேர்­தலின் போதும் வாக்­கு­ரி­மை­யினை இழந்­த­வர்கள் அது குறித்து எதிர்­வரும் 25ஆம் திக­திக்கு முன்னர் இந்த விப­ரங்­களை தேர்தல் திணைக்­க­ளத்­திற்கு அறி­விக்க முடியும் என தேர்­தல்கள் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய அறி­வித்­துள்ளார்.

mahinda-deshapriya-election-commior

 

இது­தொ­டர்பில் கருத்து வெளி­யிட்­டுள்ள தேர்­தல்கள் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய, வாக்­காளர் இடாப்பில் பெயர் இல்­லா­த­வர்கள் தங்­க­ளது குடும்ப உறுப்­பி­னர்­க­ளது முக­வரி மற்றும் தேசிய அடை­யாள அட்டை இலக்­கங்­களை அறி­விக்க முடியும்.

இந்த தக­வல்­களை ராஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள தேர்தல் திணைக்­க­ளத்தின் மேல­திக தேர்தல் ஆணை­யா­ள­ருக்கு ஒரு பிர­தி­யையும் மாவட்ட தேர்தல் காரி­யா­ல­யத்­திற்கு ஒரு பிர­தி­யையும் எழுத்து மூலம் அறி­விக்க வேண்டும்.

எதிர்­வரும் 25ஆம் திக­திக்கு முன்­ன­தாக இந்த விப­ரங்­களை அனுப்பி வைத்து மீளவும் வாக்­க­ளிப்­ப­தற்­கான உரி­மையை பெற்­றுக்­கொள்ள முடியும் என்றும் தெரி­வித்த அவர் தற்­கா­லிக அடிப்­ப­டையில் வெளி­நாடு சென்று மீள நாடு திரும்ப உத்­தே­சிக்கும் இலங்­கை­யர்கள் வெளி­நாட்டு முக­வரி மற்றும் கட­வுச்­சீட்டு இலக்­கத்தை குறிப்­பிட்டு வாக்­கு­ரி­மையை பெற்­றுக்­கொள்ள விண்­ணப்­பிக்க முடியும் எனவும் தெரி­வித்தார்.

இதே­வேளை உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல், எதிர்­வரும் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்­துக்குள் நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டுகள் இடம்­பெற்று வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

புதிய முறை­மையில் தேர்­தலை நடாத்த உத்­தே­சிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், தொகு­தி­வாரி மற்றும் மற்றும் விகி­தா­சார அடிப்­ப­டையில் தேர்தல் நடாத்­து­வது குறித்து கவனம் செலுத்­தப்­பட்டு வரு­வ­தா­கவும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

எனினும், ஒரே நாளில் அனைத்து உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தல்­க­ளையும் நடாத்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தீர்­மா­னித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
இதன் அடிப்­ப­டையில் பெரும்­பாலும் மார்ச் மாதத்தில் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்கள் நடத்­தப்­படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

புதிய தேர்தல் முறையின்படி 335 உள்ளூராட்சி மன்றங்களுக்குள் 25 மாநகரசபைகள், 41 நகரசபைகள் மற்றும் 271 பிரதேச சபைகள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.