புதிய பாராளுமன்றத்தின் பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை பதவியேற்பு !

புதிய பாராளுமன்றத்தின் பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் எதிர்வரும் 8ம் திகதி செவ்வாய்க்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள உள்ளனர். 

அதன்படி பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களாக 45 பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கவுள்ளதுடன், அவர்களில் 27 பேர் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவர்களுடன் மேலும் 05 அமைச்சர்களும் அன்றைய தினம் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள உள்ளனர். 

முன்னதாக 43 அமைச்சர்கள் நேற்றைய தினம் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டநிலையில் ஏனைய 05 பேரும் அன்றைய தினம் பதவியேற்கவுள்ளனர்.