2022-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 24 மணி நேரமும் மின்சாரம் !

ஆசிரியர் தினத்தையொட்டி டெல்லி மானக்ஷா கலையரங்கில் நேற்று நடந்த மாணவ-மாணவிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். 800 மாணவ-மாணவிகளும், 60 ஆசிரியர்களும் இதில் பங்கேற்றனர். மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி ஸ்மிரிதி இரானி வரவேற்று பேசினார்.

NarendraModi3_Fotor

நிகழ்ச்சியின்போது மோடி 9 மாநிலங்களின் மாணவ- மாணவிகளுடன் காணொலி காட்சி மூலமும் கலந்து உரையாடினார்.

சுமார் 1¾ மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

2022-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படவேண்டும் என்பதே எனது நோக்கம். தற்போது 18 ஆயிரம் கிராமங்களில் மின் வசதி இல்லை.

அடுத்த ஆயிரம் நாட்களுக்குள் இந்த கிராமங்களுக்கு மின்வசதி செய்து தரப்படும். வீடுகள் இருள் சூழ்ந்ததாக இருக்க கூடாது என்ற இலக்கை நோக்கி பணியாற்றி வருகிறேன்.