ஜனாதிபதியின் 64வது பிறந்த தினம் இன்று !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 64வது பிறந்த தினம் இன்றாகும். 

1951ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 03ம் திகதி கம்பஹ யாகொடை கிராமத்தில் பிறந்த அவர், 1971ம் ஆண்டு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து பொலன்னறுவை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அரசியலில் பிரவேசித்தார். 

1989ம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு தெரிவாகிய அவர், 1994ம் ஆண்டு பிரதியமைச்சராக கடமையாற்றினார். 

2015ம் ஆண்டு ஜனவரி 08ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் அவர் கொண்டாடும் முதலாவது பிறந்த தினம் இன்றாகும். 

அதன்படி ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் பல சமய நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.